கல்பனா -சிறுகதை

கல்பனா

அம்மா இன்னைக்கு என்ன விசேஷம் தெரியுமா என்று கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தாள் கல்பனா . ஆமாம்மா நானே உனக்கு ஞாபகப்படுதனும்னு நினைச்சேன் இன்னைக்கு மார்ச் 8 ..நம் வாழ்கையில் மறக்க முடியாத நாள் என்றாள் அம்மா கண் கலங்கியவாறு ....

அம்மா நீ மறந்து இருப்பியோன்னு நினைத்தேன் என்றவாறு தன் கையில் இருந்த கேக் பாக்சை எடுத்து அம்மாவிடம் நீட்டினாள் கல்பனா . நானும் உனக்கு முந்திரி நெய் ரவா கேசரி செய்து வைத்து இருக்கேன் என்றாள் அம்மா மகிழ்ச்சியாக ...அம்மா நான் வரும் வழியில் குமார் அண்ணாவ பார்த்தேன் அவர் உங்களிடம் இதை கொடுக்க சொன்னார் என்றவாறு மூவாயிரம் ரூபாயை அம்மா கையில் திணித்தாள் கல்பனா .

மார்ச் 8 இன்றுடன் கல்பனா அந்த இல்லத்திற்கு வந்து 25 வருடங்கள் ஆகிறது ...அது பெண் குழந்தைகளுக்கான பிரத்யேகமான இல்லம் .அதில் முதன் முதலாய் வளர்க்கப்பட்ட குழந்தை கல்பனா . கமலாம்பாள் அலுவலகம் செல்லும் வழியில் முட்புதர்களுக்கு இடையே கண்டு எடுக்கப்பட்ட அற்புத குழந்தை அவள் .கமலம்பாளே கல்பனா என பெயர் சூட்டி அவளை வளர்க தொடங்கினாள்.நாளடைவில் அவள் இல்லம் பெருகியது ...இன்று அவளது இல்லத்தில் 30 குழந்தைகள் உள்ளனர் .

கல்பனா அந்த இல்லத்திற்கு வந்து 5 ஆண்டுகளுக்கு பின் அவர்கள் இல்லத்திற்கு ஒரு கடிதம் வந்தது .நாங்கள் கல்பனாவின் பெற்றோர்கள் தயவு செய்து எங்கள் குழந்தையை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று .கமலாம்பாள் அதிர்ந்தாள்.அவள் ஆசையாக வளர்த்த கல்பனாவை 5 ஆண்டுகளுக்கு பிறகு கேட்கிறார்களே என்று இருப்பினும் குழந்தை பெற்றோருடன் இருப்பதுதான் சரி என்று வந்து அழைத்து செல்லுமாறு பதில் கடிதம் எழுதினாள்...

இரண்டு நாட்களுக்கு பின்னர் ஓர் இளம் தம்பதியினர் வந்தனர் அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை .குழந்தையை எங்கே விட்டு சென்றீர்கள் என்பதற்கும் தெளிவான பதில் இல்லை . நாங்கள் கடைக்கு சென்றிருந்தோம் அங்கு அவளை பெஞ்சில் அமர செய்து விட்டு பொருட்களை எடுத்துக்கொண்டு வந்து பார்த்தால் அவளை அங்கு காணவில்லை நாங்கள் தேடாத இடமே இல்லை என்று அந்த பெண் கண்ணீர் மல்க கூறி முடித்தாள்.

கமலாம்பளும் சரியம்மா நீங்கள் எங்கள் இல்லத்திற்கு மாத மாதம் மூவாயிரம் செலுத்த வேண்டும் அவ்வப்பொழுது குழந்தையை கூட்டி வந்து காட்ட வேண்டும் எப்பொழுதும் இல்லத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் என பல விதிமுறைகளுக்கு பின்னர் கல்பனா அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டால்

அவளை கூட்டி சென்ற 5 வது நாள் மீண்டும் தம்பதிகள் அங்கு வந்து சேர்ந்தனர் ..அவர்கள் கமலாம்பாளிடம் அம்மா எங்களால் இவளை பார்த்து கொள்ள முடியவில்லை மிகுந்த விஷமம் செய்கிறாள் அவள் இங்கேயே இருக்கட்டும் என்றனர் .

கமலாம்பாள் நீங்கள் குழந்தையின் உண்மையான பெற்றோர்கள் கிடையாது .குழந்தையின் உண்மையான பெற்றோர்கள் அவர்களை மிகுந்த அன்புடன் கையாண்டு அவர்களை நல்வழிப்படுத்துவர் என்று கூறி அவர்களிடம் இருந்து தமது இல்லத்திற்கு எந்த உதவியும் வேண்டாம் என்றும் மறுத்துவிட்டார் ..
ஆனால் நாட்கள் செல்ல செல்ல கமலாம்பாளின் கனிவான பழக்க வழக்கங்களால் கல்பனா மிக உயரிய நிலையை அடைந்தாள்..இன்று கமலாம்பாலும் கல்பனாவும் இனைந்து அந்த இல்லத்தை வழி நடத்தி செல்கின்றனர் ....

கல்பனா தம் பெற்றோருடன் சென்று மீண்டு வந்து அந்த இல்லத்துடன் இணைந்த நாள் இன்று மார்ச் 8.

எழுதியவர் : சிவ.ஜெயஸ்ரீ (23-Feb-15, 2:38 pm)
சேர்த்தது : சிவ ஜெயஸ்ரீ
பார்வை : 228

மேலே