நீலக்குயில் தேசம்24---ப்ரியா

ராகேஷ் கயல்விழிக்குள் நடந்த அந்த கடற்கரை பிரச்சனைகள் எப்படியோ ஒருவழியாய் தோழிகளின் தயவால் தீர்ந்ததுவிட்டது......வழக்கம்போல் இருவரும் சகஜமாக பேச ஆரம்பித்தனர், அந்த தோழிகளுக்கு மனதிற்குள் ஒரு பெரிய நன்றியை சொன்னான் ராகேஷ்......

"மூன்றாமாண்டு மாணரவர்கள் அனைவருக்கும் ஒருவார சுற்றுலா"என்றும் விருப்பமுள்ளவர்கள் அவரவர் டிபார்ட்மென்டில் தங்கள் பெயர்களை பதிவு செய்யும்படியும் தகவல் அறிவிக்கப்பட்டது.

அனைத்து மாணவர்களும் உற்சாகத்துடன் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர்.....கூடவே கயல்விழியும்.

ஒரு வாரம் அம்மா எப்டி சம்மதிக்கப்போறாங்கன்னு தெரிலப்பா பட் கண்டிப்பா போயே ஆகணும் நிச்சயம் இந்த இன்ப சுற்றுலாவ நான் இழக்கமாட்டேன் என்று திட்டவட்டமாக தன் தோழிகளிடம் சொன்னாள் கயல்.

ஏன்டி +2 படிக்கும் போது டூர் வரவே மாட்டா நாங்க கஷ்டப்பட்டு கெஞ்சி கூத்தாடி உன்ன கூட்டிட்டு போவோம் இப்போ என்னன்னா நாங்க வரலன்னாலும் விடமாட்டாப்போல.....ஏன் இப்படி ஒரு மாற்றம்?காதலில் விழுந்ததாலையா????என்று தோழிகள் கலாய்த்தனர்.

அப்டி ஒன்னும் இல்லடி சுற்றுலா தலங்கள் எதெல்லாம் சொல்லு? என்று கேட்டாள் கயல்....?

ம்ம்.....பெங்களூர்,மைசூர்,ஊட்டி,கொடைக்கானல் அப்புறம்......என்று யோசித்தாள் தோழி ஷீபா..

அப்புறம்.......அப்புறம் சொல்லுடி என்று ஆர்வமாய் கேட்டாள் கயல்?

அப்புறம் என்ன?தெரிலடி என்றாள்.

அப்புறம் நீலமலையும் அதை சார்ந்த இடங்களும்னு சொன்னாங்கடி அதான் எனக்கு இவ்ளோ மகிழ்ச்சி எப்படியாது பார்த்து ரசிக்கணும் எனக்கு புடிச்ச இடம் என்று துள்ளினாள் கயல்.

ஓ!அப்டியா!இதுக்க முன்னால நீ போயிருக்கியா?நல்லா இருக்குமா என்று அஜி கேட்க...?

ம்.....போயிருக்கேன்டி செம ஏரியா இந்த மாதிரி ஒரு இடத்த நீங்க உங்க லைப்ல பார்த்திருக்க மாட்டீங்க அவ்ளோ அழகு என்று நீலமலையை வர்ணித்தாள்.இவளது வர்ணிப்பு தோழிகளையும் மிக ரசிக்க வைத்தது.

வாவ் இவ்ளோ அழகா இருக்குமா? அப்போ கண்டிப்பா போகணும்டி மிஸ் பண்ணிராதிங்க ப்ளீஸ் என்று சொன்ன ஷீபாவுக்குள் ஒரு சந்தேகம்???? ஆமாடி எல்லாம் ஓகே.........ஆனால் ஒரே ஒரு சந்தேகம் எனக்கு?

என்ன என்றாள் கயல்.

இவ்ளோ வருஷம் சேர்ந்துதான் இருக்கோம்......எங்க போனாலும் நம்ம எல்லாம் சேர்ந்துதான் போவோம் அப்புறம் எப்டி நீ மட்டும் இந்த இடத்துக்கு போனா?எப்போ போனா?யார்கூட?என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பினாள்......?

ஓ! இதான் உன்னோட சந்தேகமா?நான் போனேன்டி நான் சொன்னமாதிரி அந்த இடம் இருக்கும் வேணும்னா பாரேன்.........ஆனா இந்த நீலமலை நான் நேரடியா போய் பார்த்தது இல்ல கனவுல பார்த்திருக்கேன்......நான் அடிக்கடி பார்க்கக்கூடிய கனவுல வரக்கூடிய அந்த நீலக்குயில் தேசம்தான் அந்த நீலமலையில் உள்ளது என்று கயல்விழி சொல்லிமுடிப்பதற்குள்.............தோழிகள் அடிப்பாவி இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரில இப்டி எங்கக்கிட்ட உன் கனவுல வந்தத சொல்லி ரசிச்சி நம்ப வச்சி கொல்றியேடி உன்ன.........என்று கத்திக்கொண்டே அவளை துரத்தினர்............

3பேருமே வீட்டில் சுற்றுலா செல்ல சம்மதம் வாங்கிவிட்டனர்.

கயல்விழிக்கு ஒரு ஆசை இருந்தது அந்த நீலமலையின் நீலக்குயில்களின் தேசத்தில் வைத்து ராகேஷிடம் தன் காதலை சொல்லவேண்டும் இதுவே இவளது எண்ணமாக இருந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று நீலமலையின் அழகை மனதில் நினைத்துக்கொண்டே படுத்திருந்தாள் கயல்விழி.

மறுபடியும் அந்த அழகிய நந்தவனம் அவள் கண்களில் பட உள்ளே பயணமானாள் அந்த இரவில் அடர்ந்த காட்டில் கும்மிருட்டில் வான் விண்மீன்கள் இங்கு உலவுவது போல் மின்மினிப்பூச்சிகள் அங்குமிங்கும் நகர்ந்து ஒளி வீசிக்கொண்டிருந்தன அந்த சூழலே போதுமான வெளிச்சத்தை அளித்தது பறவைகளும் குருவிகள் குயில்கள் சிறு பூச்சிகள் என அனைத்தும் ரீங்காரம் எழுப்ப பூக்களும் சந்தன மரங்களும் அழகாய் வாசனை பரப்பிக்கொண்டிருக்க அந்த மிதமான காற்றில் இவளது சாமந்தி வாசமும் பரவிக்கொண்டிருந்தது..........மிகவும் அழகாய் அந்த இடம் காட்சியளித்தது ரசித்துக்கொண்டே தன் மன்னவனிடம் காதலை சொல்ல கனவு தேசத்திற்குள் சென்றுகொண்டிருந்தாள் கயல்விழி.......!

இரவு முழுவது கனவு தேசத்திற்குள் உலவிக்கொண்டு அதே சந்தோஷத்தில் காலையில் அழகாய் கல்லூரிக்கு சென்றாள் கயல்......ராகேஷிடம் காதலை சொல்லும் போது ஏதாவது கொடுக்கவேண்டுமே என்ன கொடுக்கலாம் என யோசித்தவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது அதையே அந்த நீலமலையில் செயல்படுத்தவும் திட்டம் தீட்டினாள் கயல்விழி.......... ஆனால் இதை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாய் வைத்திருந்தாள்.

தான் செல்லவிருக்கும் டூர் பற்றி தன் அத்தை,ப்ரியதர்ஷினி,மதன் என எல்லாருக்கும் தகவல் கொடுத்தாள் கயல்.
___________________________________________________________________________________________________________________________________

திருவனந்தபுரத்தில் பாரஸ்ட் ஆபீசராக பணியாற்றி வரும் மதன் பணியிலிருந்து வேறு இடத்திற்கு மாறுதலாகியிருந்தான்......எனவே நண்பர்கள் அனைவரும் பார்ட்டி என கேட்க சரி இன்னிக்கே வச்சிருவோம் ஆனால் ஒரு கண்டிஷன் என் சொன்னான் மதன்.

கண்டிஷனா?என்ன கண்டிஷன் சொல்லுடா????என்றனர்...........நண்பர்கள்.

கண்டிஷன் இல்ல ஒரு பெட் மாதிரி......அதாவது இன்னிக்கு நாமெல்லாம் சேர்ந்து என் மாமாப்பொண்ணு கயல்விழி படிக்கும் கல்லூரிக்கு போறோம் அவள பார்க்கிறோம்......அவள பார்த்தா உங்க எல்லாருக்கும் என் செலவுல ஸ்டார் ஹோட்டல்ல பார்ட்டி ஒருவேளை பார்க்கலன்னா பார்ட்டி இல்ல எப்டி பெட்.........என சொல்லி நண்பர்களைப்பார்த்து கண்ணடித்தான்.

அப்படியே வாய்பிளந்து மௌனமாயினர் நண்பர்கள்......டேய் சரின்னு சொல்லுவோம் அங்க போய் பார்க்கலாம் என ஒருவன் சொல்ல சரிடா பெட் எங்களுக்கு ஓகே, நாங்க தயார் வாங்க கிளம்பலாம் என்று அவசரப்படுத்தினான்.

(அங்க போய் காவல் நின்னு அடி வாங்கி தராமல் இருந்தா சரி......என வாயில் முணுமுணுத்தான் நண்பனில் ஒருவன்....)

கயல்விழியை பற்றி தனது தங்கை சொல்லும்போது பார்க்கணும் என்ற எண்ணம் தோன்றியது மதனுக்கு ஆனால் முதல் நாள் அவளை பார்த்த பிறகு எப்பவும் பார்த்துக்கொண்டே இருக்கணும் என ஆசைப்பட்டான் அவன் மனம் முழுவது கயல் நிரம்பியிருந்தாள் அன்று இதயத்தில் நின்று கொண்டிருந்தவள் இன்று ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்தே விட்டாள்.

தன் தங்கை உருவத்தில் கயல் இருந்தாலும் ஏதோ ஒன்று அவளை இன்னும் அழகுபடுத்தியது ரசிக்க வைத்தது அது என்னவென்று இவன் அறியவில்லை அறிந்து கொள்ள முயற்சிக்கிறான்............அதன் முதல் முயற்சியே இந்த கயல் கல்லூரி வாசல் பயணம்தான்.



பயணங்களுடன் தொடரும்...........

எழுதியவர் : ப்ரியா (25-Feb-15, 2:04 pm)
பார்வை : 258

மேலே