கோபம்

கோபம்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலாதாரமாக அமைகின்றது. இந்தக் கோபம் எதனால் ஏற்படுகிறது..? ஒரே வரியில் சொல்வதனால் நமக்கு பிடிக்காதவை நடக்கும்போது..!

ஆம்! நமக்கு பிடிக்காதவற்றை மற்றவர்சொல்லும்போது
எழுதும்போது ,கேட்கும்போது,படிக்கும்போது செய்யும்போது.....

இப்படி பல சமயங்களில் நம் அதிருப்தியை, நம் எதிர்ப்பை கோபமாக காண்பிக்கிறோம். எமது உணர்வுகளில் மிகவும் மோசமான விளைவுகளைத் தரக்கூடியது எது எனில் கோபம் எனலாம்.

கோபம் என்பது மனிதனுக்கு மட்டுமல்ல, ஏனைய உயிரினங்களுக்கும் உரித்தான ஒன்று. கோபம்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலாதாரமாக அமைகின்றது. இந்தக் கோபம் எதனால் ஏற்படுகிறது..?

எளிதில் எவரும் கோபப்படமாட்டார்கள். நம்முடைய உள்ளுணர்வைத் தூண்டும்படியான சம்பவங்கள் நிகழ்ந்தால்தான் கோபம் வீறுகொண்டெழும்.சிலருக்குப் பொய் சொன்னால் கோபம் வரும்.

அதாவது... இல்லாத ஒன்றை இருப்பதுபோல் பொய் சொல்லி ஏமாற்றுபவர்களைக் கண்டால் கோபம் வரும்.

இன்னும் சிலருக்கோ தொட்டதுக்கெல்லாம் கோபம் பொத்துக்கொண்டு வரும். ஆனால் ஒருசில மனிதர்களோ எந்த நேரத்திலும் கோபப்படுகின்றார்கள்.

இப்படியானவர்களை நோய் எளிதில் தொற்றிக் கொள்(ல்)ளு(லு)ம்.மனம் எப்பொழுதும் சஞ்சலப்பட்டுக் கொண்டே இருக்கும். எந்தக் காரியத்தை எடுத்தாலும் அவர்களால் ஒழுங்காகச் செய்யமுடியாது.

நரம்புத் தளர்ச்சி ஏற்படும். இப்படியாக பல நோய்களைத் தேடிக் கொள்ள நேரிடும்.

சரி,

இந்த கோபத்தை எப்படித்தான் அடக்குவது..?

அலைபாயும் சிந்தனைகளை ஒருநிலைப்படுத்தி மனதைக் கட்டுப்படுத்தும் பக்குவத்தை நாமடைந்தால் அகிலமும் நமக்கு மண்டியிடும்.

அப்படியாயின் கணப்பொழுதில் ஏற்படும் சினம் சிறிதாகிவிடும்.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மனம்விட்டுப் பேசிவிடுங்கள்.

இதனாலும் கோபங்கள் ஏற்படுவதை தடுத்துவிடலாம்.

சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாகப் பேசும்போது உண்மை நிலையினை நீங்கள் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

அதைவிடுத்து பிறர் சொன்னார்கள் என்பதற்காக பலருடன் பகைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.முதலில் கோபம் ஏற்படுத்தக் கூடிய சூழலை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

கோபத்தினை ஏற்படுத்தக்கூடிய சிந்தனைகளையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

ஆம்.,நண்பர்களே.,

பிறரை நேசித்து அன்புகாட்டி மனதை ஒருநிலைப்படுத்தி தூய சிந்தனையுடன் இருந்தால் அன்பு உங்களைத் தேடிவரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆகையினால், கோபம் என்னும் அந்தக் கொடிய விலங்கினை நம் உள்ளத்திலிருந்து விலக்கி அனைத்து உயிர்களிலும் அன்பு செலுத்தி வாழப் பழகிக் கொள்ளுவோம்.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (25-Feb-15, 8:58 pm)
சேர்த்தது : சந்திரா
Tanglish : kopam
பார்வை : 111

மேலே