பழகிய மனம்

ஆரம்பத்தில்
நான் அன்பாக கேட்கக் கூடும்....
அடம்பிடிப்பாயானால்
அதிகாரம் செலுத்த நேரிடும்
என் பள்ளங்களையெல்லாம்
உன் மேடுகளைத் தகர்த்தே
நிரப்பப் போகிறேன்...
என்னில் மேடு இருப்பின்
உன் பள்ளங்களுக்கேற்ப பகிர்ந்து தருகிறேன்...
இறுக்கி அணைக்கும் பொழுது
இரு இதயங்களின் துடிப்பையும் நாம் உணரக்கூடும்...
உன்னிடம் எனக்கில்லா உரிமையா,
நான் மேலும், நீ கீழும்,
நான் கீழும், நீ மேலும் என
ஒருவர் மீது ஒருவர் அதிகாரம் செலுத்த வேண்டாம்...
அன்பான அதிகாரமென்றாலும்
மூன்றாமவருக்கு முரணாகத் தோன்றக் கூடும்...
இருவரும் அருகருகே இருந்து
பக்கவாட்டில் பகிர்ந்துக்கொள்வோம்...
குறைக்கூற இயலாது
இரத்த உறவுகளால்....
நாம் கொண்ட காதல் இருபதாண்டு, ஆம் , நாம் கொண்ட காதல் இருபதாண்டு...
என் பால்ய சிநேகிதனே.....


பார்வைதாசன்......

எழுதியவர் : பார்வைதாசன் (26-Feb-15, 1:33 pm)
சேர்த்தது : பார்வைதாசன்
பார்வை : 76

மேலே