என்னவளே -தொடர் கதை

என்னவளே

பகுதி-1

மழைக்காலம் மேகங்கள் ஒன்றோடொன்று போட்டியிட்டு போர் புரிந்து கொண்டிருந்தது .ராமைய்யா பிள்ளை வாசர் திண்ணையில் அமர்ந்து போவோர் வருவோரை இன்முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.அவரது மனம் பழைய சிந்தனையில் மூழ்கியது .மக்களுக்குத்தான் எவ்வளவு வேலை நிற்க கூட நேரமில்லாமல் சுற்றும் பூமியில் சுற்றி கரை ஒதுங்க எத்தனை பாடு. ராமைய்யா பிள்ளை தன் 30 ஆண்டுகால பணியில் இருந்து ஓய்வு பெற்று இன்றுடன் ஒரு மாதம் முடியப்போகிறது . இந்த ஒரு மாதம் தான் அவரது வாழ்வை வசந்த காலமாய் மாற்றியது .

ஒய் , ராமைய்யா நீர் இங்கு தான் இருக்கிறீரா என்று கேட்டுக் கொண்டே அவரது நண்பர் வையாபுரி அங்கு வந்தார் .ஏனய்யா என்ன விஷயம் என்றார் ராமைய்யா பிள்ளை. ஒய், உம் பெண்ணிற்கு நல்ல வரன் வந்துள்ளது நீர் பார்த்து உம் அபிப்பிராயத்தை சொல்லி விட்டால் முடித்து விடலாம் .

அதற்கு இப்பொழுது என்னய்யா அவசரம் அவள் நல்ல பணியில் உள்ளாள் அவளுக்கு எப்பொழுது திருமணம் செய்துகொள்ள ஆசையோ அப்பொழுது செய்தால் போதுமானது . நான் அவளது ஆசைக்கு முட்டுக்கட்டை போடமாட்டேன் என்றார் ..

ஒய் ,உம் மனதில் என்னய்யா நினைத்துக் கொண்டு இருக்கிறீர் உம் மகளுக்கு வயது 28 ஆக போகிறது நீரும் பணியில் இருந்து ஓய்வு பெற்றாகிவிட்டது .நல்லதை செய்ய நாட்களை கடத்தக் கூடாது .பிறகு உன் இஷ்டம் என்று இடத்தை விட்டு நகர்ந்தார் .

ராமைய்யா அதை பற்றிய விஷயங்களை சிறிது அசை போட்டார் . கல்பனா என்ன சொல்வாள் அவளது வயதிற்கும் அழகிற்கும் ஏற்ற மாப்பிள்ளையை தம்மால் பார்க்க முடியுமா என்றவாறு சிந்தனையில் ஆழ்ந்தார் ....

பகுதி-2
கல்பனா அலுவலகம் முடித்து அவசர அவசரமாக மழைக்கு பயந்து தன் முந்தானையால் கோப்புகளை மறைத்தவாறு வந்து கொண்டிருந்தாள்.ராமைய்யா பிள்ளை என்னம்மா மழைக்காலம் என்று தெரிந்தும் நீ ஏன் குடை கொண்டு செல்லவில்லை என்று இன்முகத்துடன் கடிந்து கொண்டார் .

அப்பா காலைல அவசரமா கிளம்பும்போது மறந்த்ட்டேன்பா என்றவாறு உள்ளே சென்றவள் அம்மா அம்மா எனக்கு பசிக்குது பலகாரம் எடுத்து வை என்றாள். அம்மாவிற்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று கல்பனாவை பார்த்து நான் உனக்கு எத்தனை முறை சொல்லி உள்ளேன் முகம் கை கால் அலம்பிய உடன் சமையல் அறையினுள் வா என்று ,என்று செல்லமாக தலையில் ஒரு குட்டு குட்டினாள்.

கல்பனா பயப்படுவது போல் நடித்து பாத்ரூமை நோக்கி விரைந்தாள்.அவளது அறையில் நுழைந்து டவலை எடுக்கும் பொழுதுதான் கவனித்தால் அவளது கட்டிலின் மீது சில போட்டோக்கள் சிதறி கிடந்தன ...ஐய்யய்யோ காலைல பார்த்துட்டு திரும்ப அலமாரியில் வைக்க மறந்த அவளது காதலனின் பல வண்ண போட்டோக்கள் தான் அது . அம்மா பார்த்து இருப்பாளோ என அவளது மனம் பதறியது இன்னொரு மனமோ அவள் இல்லாத சமயங்களில் அம்மா அந்த அறையினுள் வரமாட்டாள் என சமாதானம் செய்தது ..

விறுவிறு வென்று அந்த போட்டோக்களை எடுத்து அலமாரியில் வைத்து பூட்டி பாத்ரூமை நோக்கி விரைந்தாள் .மழைக்காலம் ஆயினும் கல்பனாவிற்கு வேர்த்துக்கொட்டியது ...ஒரு குளியல் போட முடிவு செய்தால் ..கல்பனாவின் வாலிப வயது அவளை இம்சித்தது தன் காதலனை நினைத்து உருகியவாறு குளியலை முடித்து சிறிது அலங்காரம் செய்து கொண்டு ஹாலில் போய் அமர்ந்தாள். அப்பாவும் அதற்குள் மாலை நேர வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார் .

அம்மா சமையல் வேலைகளை பாதி முடித்தும் முடிக்காததுமாக அவள் அருகில் வந்து அமர்ந்தாள்.ராஜலக்ஷ்மி அம்மாவிற்கோ வயது 50 ஆனால் இன்னமும் இளமையாகத்தான் இருந்தாள். அதற்கு காரணம் அவளது மனமும் உடலும் எப்பொழுதும் சுறுசுறுப்புடன் ஓயாது உழைத்துக்கொண்டு இருப்பதுதான் ...

------- தொடரும் -------

எழுதியவர் : சிவ.ஜெயஸ்ரீ (26-Feb-15, 3:28 pm)
பார்வை : 299

மேலே