பிரியாணி

"டேய்...நேத்து நைட்டே வர்றதா சொன்னியே...இப்போ வந்திருக்கே...? போனும் "சுவிட்ச் ஆப்"னு இருந்துச்சு... எங்கடா போன..?"



"அது ஒண்ணுமில்லடா மாப்ள.... ஒரு வேலையை முடிச்சிட்டு வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு....இருந்தாலும் பரவாயில்லைன்னு கிளம்பி வந்தேனா..... 2 கி.மீ. முன்னாடியே பைக் பஞ்சர் ஆகிடுச்சு......பயமாகிப் போய்டிச்சு....... நல்ல வேலைக்கு.... அந்த வயக்காட்டுல பந்தல்லாம் போட்டு பளிச்சுன்னு லைட் வெளிச்சம்.... நைட் 10 மணி மாதரியே தெரியலடா.....பாய்வீட்டு கல்யாணம் போலிருக்கு......சரி போய் பார்ப்போமேன்னு போனா பந்தி நடந்துகிட்டு இருந்திச்சு..... விடுவேனா.....!!! பிரியாணியை வெட்டு வெட்டுன்னு வெட்டிட்டுத்தான் வந்தேன்....ருசின்னா ருசி அப்படி ஒரு ருசி...!!! அப்படியே ஒரு தூக்கத்தை போட்டுட்டு விடிஞ்சதும் வண்டிய தள்ளிகிட்டே வந்துட்டேன்...!"



"என்னது 2 கி.மீ. முன்னாடி இருக்குற இடத்துல பாய் வீட்டு கல்யாணமா....?!!! அதுவும் எங்களுக்கு தெரியாமலா..?சான்சே இல்ல.... !! டேய்.......மாப்ள.... ஏற்கனவே அந்த இடம் பேய் நடமாட்டம் இருக்குன்னு அரசல் புரசலா பேச்சு இருக்குதுடா....நீ சொல்றத பார்த்தா எனக்கு வேற பயமா இருக்குதுடா....!"



"என்னடா சொல்ற....??!!!"



"மாப்ள.... நீ சாப்பிட்டது பாய் வீட்டு பிரியாணி இல்லடா.... பேய் வீட்டு பிரியாணிடா........."

எழுதியவர் : உமர் ஷெரிப் (26-Feb-15, 7:19 pm)
சேர்த்தது : உமர்
Tanglish : biriyaani
பார்வை : 269

மேலே