மகள்

திருமணம் முடிந்து மாமியார் வீடு சென்ற மகள் மூன்றே மாதத்தில் தன் கணவனை அழைத்து கொண்டு தன் ஊரில் தனி குடித்தனம் வந்ததை நினைத்து நினைத்து ஆமினாவிற்கு சந்தோசம் தாங்கவில்லை...
மருமகனின் சம்பள பணம் மொத்தமும் இனி மகளுக்கு மட்டும் தான். நாத்தனார்கள் இருவர் இருந்தும் தன் மகளை ஆட்டி வைக்க முடியாது அண்ணன் உறவு சொல்லி வந்து திண்ணவும் முடியாது . மாமனாரின் சொத்து இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் மருமகனுக்கு வந்துவிடும் தன் மகள் அதை விட்டு கொடுக்க நினைக்க மாட்டாள் என்பதில் ஆமினாவிற்கு அதிக நம்பிக்கை.
ஆச்சு ஆச்சு என பதினைந்து வருடம் ஓடியதே தெரியவில்லை. மகள் சிரமப்படுவதாக மகனிடம் இருந்து கரப்பதையும் ஆமினா இன்னும் தொடர்கிறாள்...
மருமகள், பேர பிள்ளைகள், மகன் என மகனின் குடும்பத்தை பற்றிய எண்ணம் கூட ஆமினாவிற்கு வருவதேயில்லை...மகன் கோடி கணக்கில் சொத்து சேர்த்து விட்டான் அதை எப்படி மகளின் பிள்ளைகளுக்காக மொத்தமாக பிடுங்குவது என்பதில் தான் சிந்தனை...தான் பொய் சத்தியமே செய்தாலும் மருமளால் மகனிடம் நிரூபிக்க முடியாது, பேர பிள்ளைகளையும் எளிதில் ஏமாற்றிவிடலாம் எப்படி சொத்தை பிடுங்குவது என பல நாள் சிந்தனைக்கு ஒரு புது வழியாக மகளின் மகள் பூப்பெய்தி விட்டாள்...
பேத்திக்கு மருமகனை போல அடிமை ஆண் கணவனாக வருவானா என்பதும் சந்கேம் தான்...காரணம் மகளின் திறமை மொத்தமும் பேத்தியிடம் இருந்தாலும் கால மாற்றம் என இருக்கிறதே...
வேறு வழியே இல்லை தன் மகளின் மகளை தன் மகனுக்கே கல்யாணம் செய்து வைத்தால் என்ன என முடிவு செய்தால்...மருமகளையும் பேரபிள்ளைகளையும் எப்படி விரட்டுவது என யோசித்த போது உருவானது தான் மிக அருமையான யோசனை...
மகனின் வீட்டில் ஒரு ஆறு மாதம் தங்கி மருமகளிடம் பிரச்சனை செய்தால் மகன் மருமகளை அடிக்க ஆரம்பித்து சிறிய பிரச்சனை வளர்ந்து வளர வைத்து மருமகளையும், பேர பிள்ளைகளையும் ஆறே மாதத்தில் விரட்டிவிடலாம்...மகனிடம் அழுதால் நாம் செய்த எதையும் மனதில் வைக்க மாட்டான் என தெளிவான முடிவிற்கு வந்து , மகனிடம் பேசினாள் ஆமினா"பேர பிள்ளைகளுடன் இருக்க வேண்டும் என இருக்கிறது" நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்றாள்...
நடக்க போகும் விபரீதம் தெரியாமல் மகனும் அனுப்பி வைத்தான் டிக்கெட்...

எழுதியவர் : பர்வீன் கனி (27-Feb-15, 11:07 am)
சேர்த்தது : Parveen Fathima
Tanglish : magal
பார்வை : 238

மேலே