லட்சத்தில் போராடி

லட்சத்தில் போராடி
சூல்கொண்டேன்,

பெயர் இருந்ததும்
பெயர் வைத்ததுமான
நோய்கள் நூறு கடந்தேன்,

வான், கடல், சாலை வழி
விபத்துகள் எதிலும்
என் பெயர் இல்லாது வந்தேன்,

பகை வளர்த்து
பகை அறுப்போரின்
ஆயுதப் பொருள் எதெற்கும்,
என் உடல்
அவசியம் இன்றிப் போனேன்,

மின்விசிறி,
சீமெண்ணெய் இருந்தும்,
தற்கொலை நினைவுக்கு
ஆட்படாது இருந்தேன்,

இத்தனைக்குப் பிறகும்
நான் உயிரோடு இருப்பது
சாத்தியமெனில்,

அட,
தடை எதிர்த்து
வாழ்ந்திடத்தான் நினைக்கிறேன்..!

எழுதியவர் : புதிய கோடாங்கி (27-Feb-15, 2:52 pm)
Tanglish : latchathil poraadi
பார்வை : 59

மேலே