உள்ளமதன் பிம்பம்

கண்ணாடி முன்னால்
பொய் இல்லை
உண்மையின் பிம்பம்
உறுதியானது
உள்ளம் எப்போதும்
கண்ணாடிபோன்றது
உள்ளத்தைக் காட்டுவது
முகம் எனும் பிம்பம்
உணர்ந்தாலும் தெரியும்
உள்ளமதன் பிம்பம்,
மறைத்தாலும் மறையாது
எண்ணங்களின் வடிவம்
உள்ளம் எனும் கண்ணாடியில்
தூய்மை எனும் ஒளி வேண்டும்
எண்ணங்கள் பிம்பம் ஆகும்
முகம் எனும் கண்ணாடியில்
கண்ணாடி உடைந்து விட்டால்
பிம்பமும் சுக்குநூறு
நம் உள்ளமும் அழுக்காகி விட்டால்
முகமும் இருளாகிவிடும்

எழுதியவர் : பாத்திமா மலர் (2-Mar-15, 2:55 pm)
பார்வை : 62

மேலே