தொலைந்த வசந்த காலம்

பனை ஓலை குடிலில்
பாய் அற்ற தரையில்
விண்ணை நோக்கி
வெண்ணிலவை ரசித்திருக்க

மின்னிடும் நட்சத்திரங்கள் எண்ணி முடித்ததாய்
கணக்கு சொல்லும் தம்பியை அள்ளி அணைக்கையில்

தேவதையாய் அன்னை வந்து
பிடி சோறு குலைத்து தந்து
குட்டி குட்டியாய் கதைகள் சொல்லி
குழந்தை எம்மை உறங்க வைத்த

கோயில் போன்ற குடிசை வீட்டின்
தடயம் கூட இன்று இல்லை .
மாடிக்கு மேல் மாடி கட்டி
மகிழ்ச்சி தனை புதைத்து விட்டார்

வான் நோக்க வழியுமில்லை
வெண்ணிலவும் எதிரில் இல்லை
ஏக்கத்தோடு வாழ்கின்றோம்
இனி வருமா
தொலைந்த அந்த வசந்தகாலம் .?

எழுதியவர் : கயல்விழி (4-Mar-15, 6:57 pm)
பார்வை : 126

மேலே