மருந்துண்ணா மந்திர வாதிகள்

காக்கை குருவி எங்கள் சாதி என்றுரைத்தான் பாரதி...

அது நம்சாதி அல்ல,அப்பழுக்கட்ற வினோத சித்திரங்கள்...

விசித்திர மேதைகள்.

காலையில் முளைத்த புது வானுக்கு முத்தமிடும்,
மரங்காக்கும் சிங்கார சிப்பாய்கள்.

அவை மருந்து பொருட்டு உயிர் வாழ்ந்ததாய் என் செவி செய்தி படித்ததில்லை....

எம்மருந்துண்டும் தன் ஜீவன் பிடித்திருக்க முனைந்ததில்லை.....

நினைத்த பொழுதெல்லாம் ஓடும்,குதிக்கும், நீள பாய்ச்சல் செய்யும் ,
கதி மோட்ச கீதம் தன் சிறகால் பாடிகொள்ளும்....

பிறகெதற்கு வேண்ட படும் ஆங்கே மருந்தெனும் வெற்று சொல்....

ஒய்யார வாழ்வின் அதிபதி என்ற தலைகனம் உண்டு,
ஆயினும்
தலை வலி இல்லை...

பனி சிறைக்குள் வாழ்வென்ற போதும் ஜலதோஷமென்றுமில்லே...

வவுறு செறியாமை சேற்றில் சிக்கியதுமில்லே....

கால் வழி இல்லே,கழுத்தில் சுழுக்கேதும் வந்ததில்லே

நோவென்பது எங்குமில்லே....

வான் நிரக்க பறந்து ,உறக்க கத்தி உடற் புழுக்கமாமம் நோவு தனை சாகடிக்கும் மந்திர வாதிகளே....

உம்மால் யாமும்,எம் மனிதம் பலவும் வெட்குண்டு தலை கவிழ்ந்தோம்............

எழுதியவர் : சிவசங்கர் சி (4-Mar-15, 10:34 pm)
சேர்த்தது : சங்கர்சிவகுமார்
பார்வை : 87

மேலே