செல் போன்
இது
பூக்களுக்கு வண்டுகள்
விடுக்கும் அழைப்பு !
நடமாடும் வார்த்தைகள் ..
நகர் உலா வரும் பேச்சுகள் ...
மீதி இல்லாவிடின் ,
மோதி உடைந்து விடும் நட்புகள் ....
யார் என்ன கேட்டுவிடினும்
கவலைபடாத சம்பாஷனைகள் ...
தேவை பட்டால் மட்டுமே
அங்கீகரிக்கும் அழைப்புகள் ...
சாலைகளில் சங்கீதமும் கேட்கலாம் ...
சில சமயம் ..
சாவின் அழைப்பு மணியும் .......