என்னவளே -தொடர் கதை

பகுதி -16
அடுத்த நாள் காலை கல்பனா வழக்கம் போல் அலுவலகம் செல்ல தயாரானாள் .ராமைய்யா பிள்ளை வாக்கிங் செல்ல தயாரானார் ..ராஜலக்ஷ்மி அம்மாள் காலை டிபன் மதிய உணவு தயாரிப்பதில் மூழ்கிப்போனாள் ..

சியாமின் இல்லத்திற்கு அதிகாலையே அவனது சித்தி கமலா சித்தப்பா சுந்தரம் வந்து சேர்ந்தனர் .ஹாலில் அமர்ந்திருந்த சியாமிடம் அவனது சித்தி பேசவே இல்லை ...அவளுக்கு மிகுந்த வேதனை ..அவள் சியாமை தனது சொந்த பிள்ளையாகவே நினைத்து வந்தாள்.தீடீர் என்று சியாம் யாரையோ விரும்புவதாக கூறியவுடன் மிகுந்த கவலை பட்டாள் .
சியாமின் சித்தி சியாமை பார்த்து எதுவும் பேசாமல் தன் அக்காவுடன் சமையல் அறையில் நுழைந்தால் ..சியாம் இதை புரிந்து கொண்டவனாய் அவசர அவசரமாக அலுவலகம் புறப்பட்டான் .

சியாமின் அப்பா ராஜலிங்கம் சுந்தரத்துடன் பேசி சிரித்தவண்ணம் தேநீர் அருந்தி கொண்டிருந்தார் ...சியாம் அம்மா நான் ஆபீஸ் போயிட்டு வரேன் என்றவாறு அவன் ரூமில் இருந்து வெளியே வந்தான் ..சியாமின் அப்பா என்னப்பா இன்னைக்கு அந்த பொண்ணு வீட்டுக்கு போணும்னு சொன்னயே அதுக்குதான் இவங்க எல்லாம் ஊர்லர்ந்து வந்துருக்காங்க ..நீ இப்போ ஆபீஸ் கேளம்பரையே என்றார் ஆதங்கத்துடன் ..அப்பா எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு இது அந்த பொண்ணோட விலாசம் நீங்க போய் பேசிக்கிட்டு இருங்க நான் 3 மணிக்கு வந்து ஜாயின் பண்ணிக்கிறேன் என்று வீட்டை விட்டு வெளியேறினான் ...

பகுதி -17
சியாமின் சித்தி தனது அக்காவிடம் என்ன சியாம் எதுவும் சாப்பிடாம போறான் நீயும் அமைதியாவே இருக்க என்றாள்..ஆமாம் அவன் கொஞ்ச நாளாவே இப்படிதான் இருக்கான் எதையோ இழந்தவன் மாதிரி இப்போதான் அதற்கான காரணமே தெரிஞ்சது என்றாள் சற்று நிம்மதியாக ..சியாமின் சித்தி இது என்னவோ சரி பட்டு வரும்னு எனக்கு தோனல..என்னமோ அவன் பெரிய மனுஷன் சொன்னன்னு நம்ம கிளம்பி போறத நினைத்து சிரிக்கறதா அழுவறதான்னு புரியல என்றவாறு கல்பனா வீட்டிற்கு செல்ல தயாரானார்கள் .

கல்பனாவால் அலுவலகத்தில் பணியில் சிந்தனையை செலுத்த முடியவில்லை ..சியாமிடம் தான் உன்னை காதலிக்கவே இல்லை என்று சொன்ன பின்தான் அவனை தாம் தீவிரமாக காதலிப்பதை உணர்ந்தாள்.

சியாமின் அம்மா அப்பா சித்தி சித்தப்பா கல்பனா வீட்டை அடைந்தனர்.கல்பனாவின் அப்பா சியாமின் சித்தப்பாவை கண்டவுடன் சுந்தரம் என்று ஓடி வந்து கட்டிக்கொண்டார். சுந்தரத்திற்கு ஒரு நிமிடம் எல்லாம் புரிந்து விட்டது ...சியாம் காதலிக்கும் பெண் நம் கல்பனாவா என்றார் ஆனந்தத்துடன்

சியாமின் அம்மா அப்பா ஒன்றும் புரியாமல் விழித்தனர் ...

........ தொடரும் ......

எழுதியவர் : சிவ.ஜெயஸ்ரீ (7-Mar-15, 5:12 pm)
பார்வை : 328

மேலே