பென்களை போற்றுவோம்
பெண்களை போற்றுவோம் 1
---------------------------------
பெண்களை போற்றுவோம்
அவள் பெருமையை பறை சாற்றுவோம் !
நம்மை கருவில் சுமந்து
உருவாய் வெளிவர
உதிரத்தை
உணவாக கொடுத்து வளர்த
தாயும் பெண் யென்பதால் நாம்
பெண்களை போற்றுவோம் !
கல் உடைத்து
கடும் வெயிலில்
கழனியிலும் உழைத்து
கால்படி அரிசி வாங்கி
கண்ணீர் மல்க நம்பசி ஆற்றும்
அன்பு அன்னையும்
அந்த பெண்தான் யென்பதால்
பெண்மையை போற்றுவோம்
அவள் பெருமையை பேசுவோம் !
பெண்ணடிமை இன்னும் பேசும்
பேடிகள் இங்கிருந்தால்
அவர்தம் பேதமை தூற்றுவோம் அது
பெரும் குற்றம் என்றுரைபோம் !

