உலக மகளிர் தின வாழ்த்துக்கள்

நம் இல்லத்தின்
மணம் வீசும்
மல்லிகை
இதோ பல ரூபங்களில் !!!!!!

சமுதாயத்திற்கு
சத்துள்ள
சான்றோனை
படைக்க

சவால்களை
சாட்டையடிகளை
தகர்த்து

சாதனைகளை
படைக்க====

உன்னதமான
உடலும்
உறுதியான
மனமும்
உயர்வான
எண்ணங்களும்
வலிமையான
ஊக்கமும்

தான்
உரம் என
உரத்தை
சோற்றுடன்
சேர்த்து ஊட்டி ====

நடக்கும் வரை
கை கொடுத்து
நடந்த பின்
தன்னம்பிக்கை கொடுத்து ====

பிறப்பில் தான்
ஆன் பெண் என்ற
வேற்றுமை

வளர்ப்பில் அன்பு எனும்
ஒரே கோட்ப்பாடு தான் என
ஒற்றுமையை கடைப்பிடித்து

தசவதாரமாய்
தரணியில் நடை போடும் பெண்ணே !

அலுவலகத்தில்
அரசியாய் ........

இல்லத்தில்
இல்லத்தரசியாய்

கலை உலகத்தில்
கதா நாயகியாய்......

எழுத்துலகில்
இமய மலையாய்.....

அனுபவத்தில்
அல்லி ராணியாய்....

பொறுமைக்கு
பெருமை சேர்த்து

முடியாது என்பது
கிடையாது என

அயர்ச்சியை
பின் வைத்து

முயற்சியை
முன் வைத்து

வாழ்க்கை எனும்
பரமபத விளையாட்டில்
ஏணியில் ஏறி

முழு மூச்சுடன்
செயல்படும் பெண்ணே !!!!!!!!

நீ .....................

சமுதாயத்தை
கட்டும் கட்டிட அதிகாரியோ ?

உன் சக்தியின் பின்னணி தான் என்ன ?

உன்னை மெச்ச
நினைக்கின்றேன்

வார்த்தைகள் இல்லை !

பொறமை பட
நினைக்கின்றேன்
மனம் இல்லை !!!!

உன்னை போல் செயல் பட
நினைக்கின்றேன்
செயல் பட முடியவில்லை !

போட்டியிட
சக்தி இல்லை !


நீ இல்லையேல்
நாங்கள் இல்லை !

அதனால் =============

மல்லிகையை
மனதில் சூடுகின்றோம் !

பெண்மையின்
மகத்துவத்திற்கு தலை
வணங்குகின்றோம் !!!!


==மகளிர் தின நல் வாழ்த்துக்கள் ====
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புடன் /வாழ்த்துக்களுடன்
ஆடவர் அணி !
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தலைப்பு ஓவியம் கிருபா கணேஷ்

=====================கிருபா கணேஷ் ===============================

எழுதியவர் : kirupaganesh (7-Mar-15, 11:51 pm)
பார்வை : 3826

மேலே