மகளிர்தின வாழ்த்துக்கள்
தாயாராய்த் தாரமதாய் வந்தார் போலும்
தோழியராய் உடன்பிறப்பாய் வந்தார் மேலும்,
வாயாரப் பேசிவரும் வனிதை மாரும்
வழிகாட்டும் குருவாக வந்த பேரும்,
நோயாற உடனிருக்கும் தாதி போன்றோர்
நல்லகுணம் கொண்டுழைக்கும் பெண்டிர் பலரும்,
ஓயாத தொல்லையிலும் ஒளிரும் இவர்கள்
உயர்வுபெற வாழ்த்துவோம் வனிதையர் நாளிலே...!