மாற்றம்

உன்னை கண்ட நாள் முதல்
என்னில் ஒரு மாற்றம்
உன் இதழ் புன்னகை கண்ட முதல்
என்னில் பல மாற்றம்

நேற்று கண்ணாடி ஒரு
முறை பார்த்தேன்
இன்று பல முறை பார்க்கிறேன்
இது ஒரு மாற்றம்

நேற்று அளவாய் கதைத்தேன்
இன்று தனியாய் கதைக்கிறேன்
சொற்களில் பல மாற்றம்

நேற்று என் கனவில் நான்
கதாநாயகன்
இன்று என் கனவில் அவள்
கதாநாயகி
இது ஒரு மாற்றம்

நேற்று வானத்தில் நிலா
இன்று வானத்தில் அவள் முகம்
பார்வையில் பல மாற்றம்

நேற்று பூக்கள் ஒவ்வொன்றும்
வெவ்வேறு மணம்
இன்று எல்லா பூக்களும்
அவள் மணம்
இது ஒரு மாற்றம்

நேற்று என் நினைவில் என்னை
பற்றி மட்டும்
இன்று என் நினைவில் அவளை
பற்றி மட்டும்
நினைவில் பல மாற்றம்

நேற்று நான் சுதந்திர மனிதன்
இன்று நான் ஒரு பெண்ணுக்கு
அடிமைப்பட ஒரு தலைக்காதலன்
இது ஒரு மாற்றம்

இதனால் பல மாற்றம்

எழுதியவர் : fasrina (8-Mar-15, 9:18 am)
Tanglish : maatram
பார்வை : 86

மேலே