நான் பிறந்த ஊர்
நான் பிறந்த ஊர்...
ஓடி ஆடி தடுக்கி விழுந்த இடம்
மலைகஞ்சி வாங்கிய வீடுகள்
மலைகுரங்கு ஏறிஆடிய மரங்கள்
திருடித்தின்ற இளநீர் மரம்
நீச்சல் பழகிய குளம், கிணறு
இடங்கள் பார்க்க சந்தோசமும் வியப்பும்...
மண்தரை இன்று காணவில்லை
ஓட்டுவீடுகள் மாடிவீடாகியது
மரங்கள் எலும்புகள் மட்டும் தெரிகிறது
தோட்டங்கள் தொலைந்தன
குளம், கிணறு தாகத்தில்
வருடங்கள் கடந்து பார்த்தல்
நானிருந்த சிவடும் இலாதுபோலும்
என்ன சொல்வதென்று தெரியவில்லை...
சந்தோசமாக வீடு வந்து
வருத்ததுடன் வேலைக்கு திரும்புகிறேன்...
ஏங்குகிறேன்...
வசந்தம் இனி வாராதா...
சந்தோசமோன்று தாராதா...