மலர்கள்

அப்பா ஆதவன்
ஆசீர்வாதத்தோடு
புவியின் கைப்பிடித்து
பிறந்ததிந்த செடிகளுக்கு
பூக்கள் ...

வண்ணங்கள் அனைத்தும்
வந்தது எப்படியோ
தாத்தா பேத்திகளுக்கு
வானவில்லில் இருந்து
குழைத்து தந்ததோ?

அன்னையின் கண்களில்
மண்ணைத் தூவிவிட்டு
அழகிய மகள்களை
உரசிச் சென்றாலும் தென்றலை
கோபம் கொள்ளாது
கையசைத்து மகிழும் செடிகள் ...

வரன்களை பேசி முடிக்க
வண்டுகளை வரவேற்று
மகள்களின்
மகரந்தங்களை
மருத்துவம் மலரும் முன்னே
செயற்கை கருத்தரிப்பு
செய்த காட்டிய
முன்னோடிகள் செடிகள்...

மாலையில் தந்தையின்
மடியிலே முடிவு
நிச்சயம் என்ற போதும்
மாறாத புன்னகையுடன்
ஆடிப் பாடி சிரிக்கும்
மலர்களை பார்த்தாவது
மனிதன் மகிழ்ந்து வாழணும்
வாழும் நொடிகள் அனைத்திலும் ...

எழுதியவர் : அறவொளி (9-Mar-15, 1:07 pm)
சேர்த்தது : அறவொளி
Tanglish : malarkal
பார்வை : 123

மேலே