என் காதலி

காற்றினில் கோடி வார்த்தைகள்
கலந்திடினும் ,
நீ
சீ " எனும் வார்த்தையே
என் சிந்தையில் இனிக்குமடி !

எத்தனை வருடங்கள்
தவம் கிடந்தாய் ?
என் கை கோர்த்து
பாதைகளை தடம் பார்க்க ?

நிறைய யோசிக்கிறேன்
நின்னை பற்றி ,
ஏனெனில்
எழுதும் போது கூட
பிழை கூடாது என்பதற்காக !

உலக அதிசயம் தாஜ்மகால்..
அது கூட எனக்கு சாதரணம் தான்
உன்னை கண்ட பிறகு ....

எழுதியவர் : charumathi (10-Mar-15, 12:27 pm)
Tanglish : en kathali
பார்வை : 89

மேலே