வெட்டிமுறிக்கா கணங்களிலிருந்து

...வெட்டிமுறிக்கா கணங்களிலிருந்து...

இங்கு யாருமே
மரத்தை
வெட்டுவதில்லை.

முப்பது நாளும்
இவ்வானில்
முழுநிலா.

ஜேம்ஸ் கேமருன்
காட்டாத பல காட்சிகள்
ஏராளமிங்கு.

சுத்தமான கங்கை
இங்குமட்டும்.

நதியிணைப்பு
நிறைவேற்றப்பட்ட
பகுதியிது.

பெற்றோரின்
சம்மதத்தோடு
இந்த மணமேடையில்
திருமணம்..
ஆயிசாவுக்கும்
ஆறுமுகத்திற்கும்.

பூமிவாழ் மனிதர்கள்
நுழைந்துவிடாதீர்
என்
கனவுப் பிரதேசத்தில்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (11-Mar-15, 12:06 am)
பார்வை : 131

மேலே