நில அபகரிப்பு பறிப்பு இந்த சட்டத்தில், மறைமுகமாக சொல்லப்படுவது என்ன தெரியுமா

நில அபகரிப்பு / பறிப்பு இந்த சட்டத்தில், மறைமுகமாக சொல்லப்படுவது என்ன தெரியுமா...?

முக்கிய துறைகளுக்கு நிலம் கையகப்படுத்துவதில் விவசாயிகளின் சம்மதம் பெற தேவையில்லை....என்பது உள்ளிட்ட அம்சங்களை சேர்த்து பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த ஜனவரி மாதம் அவசர சட்டம் கொண்டு வந்து அமல்படுத்தியது.

இந்த சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வருவோம் என்று சொல்லி சிவசேனா மற்றும் பாஜக வுடன் அதிமுக வும் ஒட்டு போட்டு வெற்றி அடைய செய்துள்ளார்கள்....

கமிசனுக்குப் பதிலாக....கோர்ட் வழக்குகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவே அதிமுக ஆதரவு கொடுத்துள்ளதாக திமுக கூறும்....

திமுக அல்ரெடி கமிசன் வாங்கிக் கொண்டுதான் துணை முதல்வர் கையெழுத்து போட்டார் என்று அவெங்களும் இவெங்களும் அடிச்சு சொல்லுவாங்கே பாருங்க.....

இந்த சட்டம் நிறைவேறிவிட்டதல்லவா....திருச்சி தஞ்சை என்று தொடங்கி நாகப்பட்டினம் வரை உள்ள நிலங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு விற்று விடுவார்கள்....

எஞ்சிய நிலங்கள் மற்றும் கடற்கரை நிலங்களை ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் ஐந்துக்கோ / பத்துக்கோ விற்று விடுவார்கள்....
அதானி / அம்பானி / சன் குழுமம் / பாலு குழுமம் அந்தக் குழுமம் இந்தக் குழுமம் என்று போட்டி போட்டு வாங்கியவுடன்....

இரவோடு இரவாக பொது மக்களை / விவசாயிகளை அடித்து துரத்தி விடுவார்கள் செத்து தொலைங்கடா என்று.....
என்றும் சொல்கிறார்கள் பலர்...அதெல்லாம் இல்லை என்பவர்கள் தங்களது கருத்துக்களை சொல்லலாம்.....

நாம இப்ப மட்டுமல்ல..... எப்பவுமே பிறரது வாய்களில் இருந்து வருவதை காது கொடுத்து கேட்பவன்....

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (11-Mar-15, 12:36 pm)
பார்வை : 92

சிறந்த கட்டுரைகள்

மேலே