தேவை இல்லை

ஒரு கிராமத்தில் ஜமிந்தார் ஒருவர் இருந்து வந்தார் அவர் தன்னை அனைவரும் வணங்க வேண்டும்
என்ற எண்ணத்தில் வாழ்ந்தார் .
ஒரு நாள் அந்த கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்தார் அவரை அனைவரும் வணங்கினர் .
இதை அறிந்த ஜமிந்தார் முனிவரை சந்தித்தார் .அவரிடம் முனிவரே இங்கு இதுவரையில் என்னை
மட்டுமே வணங்கி வந்தனர் இன்று உங்களை ஆனால் நான் எவரையும் வணங்க தேவை இல்லை .
என்றான்.இருவரும் பேசிக்கொண்டே வெகுதூரம் நடந்தனர் மதிய வெயில் வெட்ட வழி
கால்கள் சுட்டது ஜமிந்தார் - முனிவரே வெயில் பலமாக உள்ளது நிழலில் களைபராலமா என்றார் .

அதற்கு முனிவர் சரி ஆனால் நிழலை நீயேன் தேடுகிறாய் உன்னிடமே உள்ளது என்றார்
ஜமிந்தார் திகைத்தார் என்னிடமா ?
ஆம் . இதோ உனது கால் அடியில்
ஐயோ !இதில் என்னால் எப்படி அமர முடியும் .எப்படி முடியும் என்றார்
உனது நிழலே உனது சொல்லை கேட்காத பொது பிறரிடம் எதிர்பார்ப்பது
தவறுதானே என்றார் .

ஜமிந்தார் மன்னிப்பு கேட்டு வருந்தினார்...

எழுதியவர் : சு முத்து ராஜ குமார் (16-Mar-15, 12:19 pm)
Tanglish : thevai illai
பார்வை : 321

மேலே