உறவுகளே உறவுகளே
..."" உறவுகளே!!! உறவுகளே!!! ""...
இரவினில் உறக்கம் நிரந்தரமா
விடியும்பொழுதுதான் நிச்சயமா
உனக்கு நானோ எனக்கு நீயோ
என்றாவது ஒருநாள் நிச்சயம்
நாம் அழுதுதான் ஆகவேண்டும்
சட்டேன்றே கோபம் வந்துவிட
பட்டென்று வெட்டிக்கொள்ளும்
முறிவின் காயங்கள் மூர்ச்சியால்
மூச்சை அடக்கியே போய்விடும் ,,
உறவுகளே என் உறவுகளே
நமக்குள் விரிசல்கள் எதற்கு
இன்றிருப்பார் நாளைக்கான
வாழ்க்கையின் உலகமன்றோ
பிறந்துவிட்டோம் நாமெல்லாம்
இறப்பதற்கு இதன் இடையில்
பிரிவினைகள் நமக்கெதற்கு
பிரச்சனையில்லா வாழ்வேது
விரல்தாண்டி வளரும் நகமதை
அழகாய் வெட்டுவதைப்போல்
உறவின் புறம்தாண்டி வளரும்
பகைமைகளை நீ வெட்டிவிடு
உடைத்து உயிர் வாழ்வதைவிட
விலகியெனும் விசாரிப்போமே ,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

