ஆத்திரம் அழிவைத் தரும்

மாவீரன் அலெக்சான்டர் இந்தியாவின் ஒரு பகுதியை கைப்பற்றிய வீதியில் நகர்வலம் வந்துக் கொண்டிருந்தார். அப்போது தன் எதிரே வயதான யோகி வருவதை கண்டு குதிரையிலிருந்து கீழிறங்கி அவரை தலை வணங்கினார்.

அந்த யோகியின் கண்கள் சாந்தமும், அன்பு ஒளியும் நிறைந்து கணப்பட்டது.உங்களுக்கு என்ன வேண்டுமானாழும் தருகிறேன், என்னுடன் ‘Macedonia’ வந்துவிடுங்கள்.

உங்கள் வருகையால் என் நாட்டு மக்கள் ஆனந்தம் அடைவார்கள். என் நாடு சுபிற்சம் பெரும்” என்று யோகியை தன் நாட்டிற்கு அழைத்தார் அலேக்சான்டர்.

யோகியோ,எனக்கு எதுவும் வேண்டாமய்யா, இந்நாடும், நான் வசிக்கும் காடுகளே எனக்கு போதுமான மகிழ்ச்சியை தருகிறது”, என அமைதியாக கூறினார்.

தனது வேண்டுகேளை நிராகரித்ததால் கோபம் தலைக்கேறிய அலேக்சான்டர்,தன் இடைவாளையுருவி யோகியை நோக்கி பேசலானார்,

“மடையனே!! நான் யாரென்று தெரியுமா? நான் தான் மாவீரன் அலேக்சேண்டர். என் ஆனையை மறுத்ததற்கு இப்பொழுதே என்னால் உன்னை கொல்ல முடியும்,மறியாதையாக நான் சொல்வதை கேள்” என்றார்.

யோகியோ தைரியமாக,

“உங்களால் மாயையான என் உயிரை கொல்ல முடியாது. என் உயிரை போர்த்திய உடலை மட்டுமே கொல்ல முடியும். இந்த உடல் என் உயிரை போர்த்திய ஆடைமட்டுமே”, என்று அமைதியாக கூறி மீண்டும் தொடர்ந்தார்.

“அரசே உண்மையில் நீங்கள் யாரென்று உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் என் அடிமையின் அடிமை” என்று சிறிதும் தயங்காமல் புன்னகையுடன் கூறினார்.“ஏன் அப்படி சொல்கிறாய்”, என்று கோபத்துடன் கேட்டார் அலெக்சான்டர்.

“என்னால் என் கோபத்தை கட்டுப் படுத்த முடியும்.

கோபம் எனது அடிமையாகும். ஆனால் நீங்களோ எழிதாக உங்கள் கோபத்திற்கு அளாகிவிடுகிறிர்கள்.நீங்கள் கோபத்தின் அடிமை.அதனால்தான் உங்களை என் அடிமையின் அடிமை என்கிறேன்”, எனக் கூறினார்.

யோகியின் போதனை அவர் தம் தவறை உணரச் செய்தது.

வாயடைத்தவனாய் அங்கிருந்துஅமைதியாக சென்றார் அடிமையின் அடிமையான மாவீரன் அலெக்சான்டர்.

ஆம்., நண்பர்களே.,

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும்.

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்” என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்…

கோபம் என்பது மனித வாழ்வில் தவிர்க்க வேண்டிய உணர்ச்சி அதனால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை.

கோபத்தை கட்டுபடுத்தி மகிழ்ச்சியான வாழ்வை பெறுவோம்.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (18-Mar-15, 9:54 am)
சேர்த்தது : சந்திரா
பார்வை : 179

மேலே