பிசைந்தவன் சொன்னான்

அந்த சுத்த வெளியில் அண்டமும் ,
அதில் கற்கண்டை ஒத்த நட்சத்திர வனமும் கோர்த்து வைத்தவன்..

என்னை பிசைந்து செய்த கதை யாதெனில்?

தசை சேற்றால் தேகம் சுட்டு,

நரம்பு கயிரால் விழாமல் அதை கட்டி,

மதியும்,மச்சையும்,எழும்பும்,
ஆங்காங்கே உறுப்பு பலவும் புதைத்து..

இவை செவ்வனே வினை செய்ய உயிர் என்ற காற்றை இடைவிடாது கசியவும்,
நிறையவும் நிறுத்தியதோடு நில்லாமல்,

திறக்க படாமல் உறைந்து கிடக்கும் பக்கங்கள் பொல
புதிர் நிறைந்த எதிர் பொழுதுகளின் கூட்டமும்
கொட்டி வைத்தான்...

விடுதலையின் கதவை
என்று அவன் திறப்பான் என்று விழியும் பூத்து,
இரவையும் பகலையும் ஏந்தி நின்றேன்...

செயலில் ஒருமை கொள்வது எவர்க்கும் விடுதலை என்று சொல்லி அவன் மறைந்தான்...

எழுதியவர் : சிவசங்கர்.சி (18-Mar-15, 5:43 pm)
பார்வை : 112

மேலே