சின்ன சின்ன சந்தோசம் -சகி

என் சின்ன சின்ன சந்தோசம்

நாம் கொண்டு செல்ல
எதுவுமில்லை இவ்வுலகில் எவருமே .....

மானிடனாய் பிறந்து விட்டோம்
மனம் கொண்டவர்களாய்
வாழ்ந்து மடிவோம்..

எளிமையானவர்களுக்கு
முடிந்தவற்றை செய்வோம்.....

சாலைபயணம் ....

அறுந்து விடும் காலணி....

உடனே புதிய ஒன்று
வாங்கி மகிழ்வதை விட
தெருவோர சாலைகளில் காலணி
தெய்க்கும் மானிடர்க்கு உதவும்
எண்ணத்தில் ஒரு பத்து ரூபாய்
கொடுத்து தைத்து போடுவோம்.....

அவர்கள் முகத்தில் தோன்றும்
சந்தோஷத்தின் உணர்வை
உணர்ந்து பாருங்கள்....

ஏழை உள்ளம் எத்தனையோ
உள்ளங்கள் நம்மை வாழ்த்தும்.....

தள்ளுவண்டியில் வரும்
ஐஸ் வியாபாரியிடம்
ஒரு பத்து ரூபாய் கொடுத்து
ஒரு ஐஸ் வாங்கி
சுவைத்து பாருங்கள் ....

வாழ்த்தும் அவ்வுள்ளமும்
மனதார நம்மை ....

ஆடம்பர வாழ்வை
வெளிபடுதுவதை விட
எளியவர்களுக்கும் இயன்ற
உதவி செய்வோமே ....

எழுதியவர் : சகிமுதல்பூ (20-Mar-15, 5:56 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 953

மேலே