நம்பிக்கையில்....
மரணம் மானிடனுக்கு ஒருமுறையாம்-ஆனால்
எனக்கோ மரணம் தினம் பலகணம்
என் கனவுகளில் பல இலட்சியங்கள்
உயிர்பெற்ற போதும்
உன் கதையில் எல்லாமே
மறுகணம் மரணித்து விடுகிறது
பல வலிகளை கொடுத்த உன்னால் கூட
ஒரு வழியை கொடுக்க முடியவில்லை
உன்னால் கிறுக்கிய எழுத்துகளையும்
புரட்டிப்பார்
எழுதப்போகும் எழுத்துகளையும் உற்றுபார்
என் விழிகளின் ஈரங்கள் உன் காகிதத்தில்
கறை படிந்திருக்கும்.ஆனபோதும்
காத்திருக்கிறேன்,
மீண்டும் ஒருமுறையாவது
என் மரணித்த இலட்சியங்கள்
உயிர் பெறும் என்ற நம்பிக்கையில்....