எனக்காக ஓர் கனவுத்தோட்டம்

தென்றல் விரித்தது தோட்டம்பூ விற்காக
தென்ற‌லே நீவிரித்தாய் ஓர்கனவுத் தோட்டம்
எனக்கா கமனமன்றத் தில்

எனக்காக ஓர்கனவுத் தோட்டம் தருமுனக்கு
நான்தருவேன் பூங்கவிப்பூங் கா

ஓர்கனவுத் தோட்டத்தை நெஞ்சில் விரித்து
நிஜத்தினில் காக்கவைத் தாய்
------கவின் சாரலன்

கவிக் குறிப்பு : கவி நண்பர் சர் ஃ பான் விரும்பிக் கேட்டிடுந்த
எனக்காகக் கனவுத் தோட்டம் சிந்தியல் குறள் வெண்பாக்களாக ....

எழுதியவர் : கவின் சாரலன் (23-Mar-15, 4:57 pm)
பார்வை : 135

மேலே