மூன்று குழந்தைகள் மச்சான் - கற்குவேல் பா

உயர் வகுப்பு
பலகாரக் கடை ..
உள் எங்கும்
வண்ண இனிப்புகள் ..

சொகுசு வண்டியில்
தாயுடன் வந்தே
வாங்கி சுவைத்தது
பணம் படைத்தவரின் - பணக்கார
குழந்தை ஒன்று ..

சுவைக்க நாவிருந்தும்
வாங்க பணமின்றி
கண்ணாடி வழியே
உற்று நோக்கியிருந்தது - ஏழை
குழந்தை ஒன்று ..

வாங்க பணமிருந்தும்
சுவைக்க நாவிருந்தும்
உள்ளே அனுமதிக்கப்படாமல்
வெளியே நின்றது - தாழ்த்தப்பட்டவரின்
குழந்தை ஒன்று ..

இனிப்புகளில் மட்டுமே
வண்ணம் இங்கில்லை ..
இவர்களின் மனங்களிலும்
சமூக வடிவங்களிலும்
நிசப்தமாக ...


-- கற்குவேல் .பா --

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (23-Mar-15, 7:42 pm)
பார்வை : 120

மேலே