அகஅழுக்குகள்

அதிகாலைப் பொழுதொன்றில்
அந்த ஒற்றை கம்பத்தில்
அமர்ந்திருந்த அக்குருவி
அற்புத கீதமிசைத்தது ...

சோகத்தின் சுரங்கள்
தேகத்தின் உள்நுழைந்து
நெஞ்சத்தை சுட்டது...

சிறு அமைதிக்குப்பின்
சிட்டுக்குருவியொன்று
சிறகடித்து வந்தது ...

இருகுருவிகளும்
இசைவுடன் அலகால்
உரசிக்கொண்டன...

அழுத்தமான முத்தம் போலும்
அடுத்த கச்சேரி
ஆரம்பமாயிற்று ...

புது சுரமெழுந்ததில்
புவியே மலர்ந்தது மெல்ல...

கச்சேரி முடிந்து
கணநேரத்தில்
பறந்தன குருவிகள் ...

அதுவரையென்
அகத்தினுள் அப்பியிருந்த
அழுக்குகளையும்
எடுத்துக்கொண்டு ...!
_____________________________________
## குமரேசன் கிருஷ்ணன் ##

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (23-Mar-15, 7:44 pm)
பார்வை : 188

மேலே