துன்பத்தின் சுவடுகள்

ஒன்றாவது பயிலும்
தன் தமயனுக்கு
பாடம் கற்பிக்கிறாள்
எட்டாவது பயிலும்
உடன் பிறந்தவள் ...

கல்லூரி செல்லும்போது
எட்டாவதும்
எளிதாகலாம்
அவளுக்கு ...

'இதுவும் கடந்து போகுமென '
என்றோ படித்தது
மனதுள் ஒலித்தது
அவர்களை காண்கையில் ...

வானம் தன் நிறத்தை
வசப்படுத்திக் கொள்ளும்
அற்புதம் போல்
வாழ்வின் சூட்சுமம்
வருடுகிறது நெஞ்சை ...

பெரிய துன்பங்களை
சந்திக்கும்போது
உடைந்து நொறுங்கலாம்
நாளை சிறிய
துன்பத்தின் சுவடுகள் ...
----------------------------------------------------
## குமரேசன் கிருஷ்ணன் ##

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (25-Mar-15, 10:11 am)
பார்வை : 525

மேலே