கருத்து சுதந்திரத்தை கருத்துரிமைகளை பறிக்கும் சட்டம் செல்லாது என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கதே கி வீரமணி
கருத்து சுதந்திரத்தை / கருத்துரிமைகளை பறிக்கும் சட்டம் செல்லாது என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கதே....
கி . வீரமணி..!
இந்தச் சட்டத்தின் பிரிவை நாங்கள் ஆழ்ந்து ஆராய்ந்து தேவையான அளவுக்கே பயன்படுத்துவோம் - தவறாகப் பயன்படுத்தமாட்டோம்’ என்று மத்திய அரசு தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட கருத்தினை ஏற்கவில்லை உச்சநீதிமன்றம்.
இந்த அம்சத்தை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்; காரணம், இதற்கு முன்பு ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அத்துணை கறுப்புச் சட்டங்கள் - கடுமைச் சட்டங்கள் (Draconian Laws) அனைத்தையும் நுழைக்கும்போது.....
இப்படிப்பட்ட வாக்குறுதிகளை நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் ஆளுவோர் கூறுவதும், பிறகு நடைமுறையில் அவற்றைக் காற்றில் பறக்கவிடுவதும் சர்வ சாதாரணமான நிகழ்வுகள் ஆகும்.
தவறாக எழுதப்படும் அவதூறு பரப்பும் செய்தி, கட்டுரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிவில், கிரிமினல் தேசப்பாதுகாப்பு முதலிய சட்டங்கள் ஏராளம் சட்டப் புத்தகங்களில் உள்ளபோது, இம்மாதிரி ‘புதிய உற்பத்திகள்’ பாசிசத்தின் வெளிப்பாடுகளேயாகும்.
எனவே, இத்தீர்ப்பின்மூலம், ஜனநாயகத்தின் அடிக்கட்டுமானம் குலைக்கப்படாமல் கருத்துச் சுதந்திரமே அது - காப்பாற்றப்பட்டுள்ளது!
எனவே, இத்தீர்ப்பினை வரவேற்கிறோம். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.
முன்பு கொண்டு வந்த தடா , பொடா மற்றும் இது போன்ற சட்டங்களை அரசியல் பழிவாங்குதலுக்கும் அப்பாவி இஸ்லாமியர்கள் மீதும்...ஆயுதம் ஏந்தாத மாவோஸ்ட் கள் மீதும், மனித உரிமை கோரி போராடிய காஷ்மீர் இஸ்லாமியர்கள் மீதுமே பாய்ச்சினார்கள்....
அதுவும் உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை மற்றும் தேசிய பாதுகாப்பு துறை மற்றும் இவர்களுடன் பின்னிப்பிணைந்த இந்திய உளவுத் துறையும் வேக வேகமாக அப்பாவிகளை பிடித்து பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப்பது...... என்பதிலேயே குறியாக இருந்தார்கள் என்பதைத் தான் அய்யா அவர்கள் மறைமுகமாக கூறியுள்ளார் என்பதையும் சேர்த்தே புரிந்து கொள்ளலாம்....
( எழுத்து தளத்தில் உள்ள குறிப்பு - 66 A / IT ACT என்பதை நீக்கி விடலாமே....ஆசிரியரே...)
- சங்கிலிக்கருப்பு -