ஏமன் ஹவுதி போராளிகளுக்கு எதிராக குண்டு மழை பொழியும் இருபது நாடுகள்
ஏமன் ஹவுதி போராளிகளுக்கு எதிராக குண்டு மழை பொழியும்...
இருபது நாடுகள்...?
ஏமனில் உள்நாட்டுப் போர் வலுத்து வருகிறது. ஹவுதி என அழைக்கப்படுகிற ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் அங்கு அரசு படையை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர்.
ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது.
ஏமன் தலைநகர் சனா மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் பகுதிகளில் 100 – க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய போர் விமானங்கள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன.
இதில் கிளர்ச்சியாளர்களின் ஏராளமான போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடியான தகவல் எதுவும் இல்லை.
மேலும் சவுதி அரேபியாவை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்களும் ஏமனில் குவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சவுதி அரேபிய படைகளுடன், கத்தார், ஜோர்டான், குவைத், பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் படைகளும் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன.
மேலும் பாகிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளும் இந்த தாக்குதலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளன. தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது.
இந்த தாக்குதலை ரசியா மற்றும் ஈரான் கண்டித்துள்ளன...
உடனடியாக அங்கிருக்கும் படைகள் வெளியேற வேண்டும் என்று கூறி உள்ளார்கள்....இதுவும் ஒரு கள்ள ஆட்டம் தான்...
வளைகுடா நாடுகளின் உடனடி தேவையாக ஜனநாயகம் இருக்கையில்....இவர்கள் ஜனநாயகம் அடைந்து விடாமல் இருக்க... ஷியா / சன்னி மோதல்களாக பல நாடுகளில் மடை மாற்றி விட்டார்கள்...
இவைபோக சில வளைகுடா நாடுகளில் தேசிய இன போராட்டமாக திசை திருப்பி உள்ளார்கள் யூத கார்ப்பரேட் கும்பல்...
அமெரிக்காவிலும் மக்கள் போராட்டம்... ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் போராட்டம்....வளைகுடா நாடுகளிலும் மக்கள் போராட்டம்....ஆப்பிரிக்காவிலும் மக்கள் போராட்டம்....
யூத இனவெறி கார்ப்பரேட் மற்றும் இவர்களின் நட்பு சக்திகளுக்கு பெரும் தண்டனையை வழங்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் எனலாமா...?
- சங்கிலிக்கருப்பு -