தன்னுயிர் தந்தே காப்பான்

மூன்று தெய்வங்கள் முன்னுரையாகி இன்று வரை இலையோடிய
நன்றென பெயர் பெற்ற என்றமிழ் நாடே என்றன் நாடு!
முத்தமிழ் சங்கங்களின் முத்தங்களை பெற்றதெங்கள் நாடு
முதலிடைக்கடை என மூன்று சங்கத்தமிழ் தந்ததென் நாடு!
வள்ளுவனே வாஞ்சையோடு தந்த திருக்குறளும்
அள்ளுவோர்க்கு ஆழமான கருத்துக்களையும்
இரண்டடியில் எடுத்துத்தந்த நல்லவனே
இவ்வையகமே போற்றும் என் வள்ளுவனே!
கம்பன் படைத்த காவியமும்
பாரதியின் புரட்சிப்பாடல்களும்
பைந்தமிழ் நாட்டில் புரட்சியை
நைந்து விடாமல் விதைத்ததுவே!
பாரதிதாசன் இயற்கையை ரசித்து
பாடல் புனைந்த தமிழ் நாடு!
எண்ணில்லா புலவர்களையும் தன்னிகரில்லா
பாடல்களையும் தந்தது எங்கள் நாடு!
அறுப்பதுமூன்று நாயன்மார்களும்
அயல்நாட்டு வேதக்காரர்களும்
அல்லவின் பக்தர்களும் மெய்மறந்து
உலாவும் எங்கள் நாடே!
பாதியிலே வந்த இந்த ஜாதிகளை அழித்திடவே
நீதியினை நிலைநாட்ட
மீதித்தமிழர் மெல்லவே இணைந்திடுவோம்!
தமிழன் என்று சொன்னாலே
தலை நிமிர்ந்து நிற்பான்.
தமிழ்நாட்டின் நற்பெயரை
தன்னுயிர் தந்தே காப்பான்!

எழுதியவர் : இசபெல்லா மைக்கேல் தாமஸ் (27-Mar-15, 5:34 pm)
பார்வை : 360

மேலே