ஒரு பெண்ணின் கதை

***ஆயிரம் கால பயிரொன்று
நட்ட இடம் பாறையாய்
அதன் விதைகளும் வீரியம் அற்றதாய் ............



***இதில் உணர்வுகள் தவறானது
புரிதல்கள் அர்த்தமற்றது
நியாயங்கள் அநீதியானது...........

***சுட,சுட தான் பொன்னும் மின்னுமாம்
வார்த்தைகள் சூடாய்
ஏச்சு மழைகள் அமிலமாய்

***பக்குவ தேர்வில் முடிவு தோல்வியாய்
அறிவிலும் ஊனமாம்
அன்பிலும் ஈனமாம்......

***கண்ணீரின் கடைசி துளி தேடினேன்
வறண்டு போனதாய் வாக்கு மூலம் தந்தது
மொத்தமாய் சிந்திய நாளை ,மூளையில் தேடினேன்
மீண்டும் கண்ணீர் மழையென....

***செத்த பிணத்திற்கும் உயிர் உண்டோ?
உண்டு ,உண்டு இதோ இன்னும் நான் இருக்கிறேன்..........

***வீசி எறியப் பட்ட என்னில்
கழுகு ஒன்று இதயம் தேடியது ருசிக்க...............


நான் கண்ட ஒரு பெண்ணின் நிலை................கதை கேட்டு என் மனம் பாரமானதால் வந்த வெளிப்பாடு .......புலம்பல் இது.............

எழுதியவர் : கௌதமி தமிழரசன் (27-Mar-15, 8:05 pm)
Tanglish : oru pennin kathai
பார்வை : 1048

மேலே