பசி மயக்கம்

பசி மயக்கம்...

அன்று தம்பிக்கு முதல் முடி இறக்க நம் குல தெய்வம் கோவிலுக்கு போறதாய் அம்மா சொன்னதில் இருந்து எப்படி இருக்கும் என்றே எண்ணம்..

அப்போது மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் விடுப்பு கூட அம்மா வந்து தான் கேட்டார்கள்.

அதன் பிறகு ஒரு வாரம் சென்று இருக்கும். வியாழன் இரவு எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். எனக்கு மிக மகிழ்ச்சி. நிறைய சாப்பிட செய்து இருந்தார்கள். என்ன சாமி படையல் முடிந்து தான் சாப்பிட முடியும். இரவு 11 மணிக்கு என் சித்தப்பா வீட்டிற்கு சென்றுவிட்டோம். எங்களுக்கு முன்பே பெரியப்பா,பெரியத்தை சின்னத்தை குடும்பங்கள் வந்துவிட்டார்கள். எனக்கு orey நேரத்தில் எல்லாரையும் பார்த்ததும் பண்டத்தின் மீது இருந்த ஆசை போயிற்று.

எல்லாரும் பேச நங்கள் விளையாட ஆரம்பித்தோம்.பிறகு எங்களை தூங்கவைத்து விட்டார்கள்.6 மணிக்கு எங்களை எழுப்பி குளிக்கவைத்து எல்லாரும் கிளம்பிவிட்டோம். கோவில் கோபுரம் தெரியும் என்று நான் நினைத்தேன். இதற்கு மேல் நடந்துதான் செல்லவேண்டும். எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.

நீரின் அளவு குறைவாய் ஓடியதால் ஆற்றில் இரங்கி நடத்து பின் தென்னந்தோப்பு அடுத்து வாழைத்தோப்பு இப்படியே ஆறு ஏழு தோப்புகள் நடந்தோம். ஒரு வழி கோவில் வந்தாச்சி ன்னு யாரோ சொன்னங்க. எங்கனு பார்த்தேன் ஒரு மேட்டின்மேல் ஒரு சூலம் இருந்தது. எல்லாரும் சுத்தம் செய்து தம்பிக்கு மொட்டை போட, பொங்கல் வைக்க ஆரம்பித்தனர்.

அவ்ளோதான் என்னால் பார்க்க முடிந்தது.மதியம் 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது. காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்தது என்னால் பார்க்கமுடியவில்லை.மெதுவாய் ஒரு மரத்தின் நிழலில் படுத்து விட்டேன்.பிறகு யாரோ என்னை எழுப்பி சாமி கும்பிட சொன்னார்கள்.எனக்கு எதுமே தெரியல. மீண்டும் படுத்து விட்டேன்.யாரோ ஒருவர் அங்க புள்ள பசில கண் சொருக்கி கிடக்கு புள்ளக்கு கொண்டுங்கனு பத்தி பேர் சாப்பிட பின் சொன்னார்கள். என்னால் கேட்க முடிந்தது. பின் யாரோ வந்து ஒட்டிவிட்டார்கள். என் சின்னத்தை கணவர். அந்த மாமா தான் எனக்கு ஊட்டிவிட்டாராம்.

அங்கே நான் பசி மயக்கத்தில் இருப்பது தெரியாமல் கடவுள் பக்தி அதிகமாகிவிட்டது.

- வைஷ்ணவதேவி

எழுதியவர் : வைஷ்ணவதேவி (28-Mar-15, 8:07 pm)
Tanglish : pasi mayakkam
பார்வை : 389

மேலே