என்றும் நாட்கள் இன்றுபோலில்லை

பூவில் பனித்துளியாய் இருந்த நாம்
பூவே பனித்துளியாய் ஆனது ஏனோ!

வானம் பார்த்த பூமியாய் இருந்த நாம்
வானம் பார்த்த உழவனாய் ஆனது ஏனோ!

தூங்கும் குழந்தையாய் இருந்த நாம்
அலறும் குழந்தையாய் ஆனது ஏனோ!

காதல் தேவதையாய் இருந்த நீ
கனவு தேவதையாய் ஆனது ஏனோ!

நீதான் உலகம் என இருந்த நான்
யாரும் இல்லாதவன் என ஆனது ஏனோ!

போதிமரத்தடியில்
புனிதத்தை போதித்த புத்தன் இன்று
புதர்மண்டிய போதிமரத்தடியில்!!!

என்றும் நாட்கள் இன்றுபோலில்லை
காதலிப்போம் ....!
காத்திருப்போம் ....!
காதலிப்போம் ....!

எழுதியவர் : TP Thanesh (28-Mar-15, 8:23 pm)
பார்வை : 78

மேலே