நீலக்குயில் தேசம்31---ப்ரியா

கயல்விழி யாருக்காக வெளியில் குதித்தாளோ அவனை பார்க்கமுடியாமலேயே அடிப்பட்டு அப்படியே மயங்கிவிட்டாள்.....உடன் வந்தவர்கள் கயலை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் கூச்சலும் குழப்பமுமாக இருப்பதை தூரத்திலிருந்த அவன் பார்த்துவிட்டு இங்கு வந்தான் அவன் வருவதற்குள் இங்கிருந்தவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர் என்ன விஷயம்? என்று எதையுமே அவனால் அறிந்து கொள்ளமுடியவில்லை, ஏதோ விபத்து நடந்திருக்கிறது பெரிய அளவில் காயம் இல்லை என்று மனதை தேற்றிக்கொண்டான்......!

கயல்விழி விழுந்த இடத்தில் நின்று அங்கு சிதறிக்கிடந்த பொருட்களை ஹேன்ட்பேக் உட்பட அந்த கடிதம் மற்றும் 2,3 துண்டுகளாக உடைந்து கிடந்த கண்ணாடிகளையும் எடுத்துப்பார்த்தான் அவன்??????

என்ன இது என யோசித்தவன் ஒவ்வொன்றாக கண்ணாடித்துண்டுகளையும் மற்ற பொருட்களையும் எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டான்.......சுற்றிமுற்றி ஏதாவது பொருட்கள் இருக்குதா தவறியதா என்று நோட்டமிட்டவனின் கண்களுக்கு சிறிது தொலைவில் புதரில் கிடந்த அந்த செல்போன் மாட்டவில்லை..........சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டான்......வீட்டிற்கு சென்றதும் தனியே ஒரு இடத்தில் அமர்ந்தவன் அந்த ஹேண்ட் பேக்கிலிருந்த அனைத்துப்பொருட்களையும் வெளியே எடுத்து வைத்தான் பெண்களுக்கான அலங்காரப்பொருட்களும் கைக்குட்டை மற்றும் 500ரூபாயும் இருந்தது கண்டிப்பாக இது ஒரு பெண்ணின் உடைமைதான் என்று உறுதிபடுத்திக்கொண்டான். முகவரியோ? இல்லை வேறு ஏதாவது தடயமோ? கிடைக்குமா என்று பார்த்தான் ஒன்றும் கண்ணில் அதில் இல்லை.....

அதன் பிறகு அந்த கடிதத்தை எடுத்தான்.......மனதிற்குள் அடுத்தவர் ரகசியத்தை படிக்கலாமா?அது தவறு அல்லவா?என்று மனதில் நினைத்தவன் அப்படியே வைத்தான்.....ஆனால் படி படி என்று யாரோ சொல்வது போன்ற உணர்வு தட்ட.....பரவாயில்லை படிப்போம் என்று படிக்க ஆரம்பித்தான்...........

அன்பு செல்லத்திற்கு.......என தன் இதழ் பதித்த ஒரு முத்தத்தோடு எழுத தொடங்கியிருந்தாள் அந்த கடிதத்தை.......

அந்த கடிதத்தில் உயிர் இருப்பதை இவன் நன்றாக உணர்ந்தான்.........

"உன்னை முதல் நாள் பார்த்ததும் மிகவும் பிடித்து போனது ஆனால் நீயே வந்து சொல்லட்டும்னுதான் காத்துக்கொண்டிருந்தேன் அதுமட்டுமல்ல மனதிற்குள் வேறு ஒரு விஷயமும் உண்டு கீழே சொல்கிறேன் படித்துக்கொள்" என்று சாதரணமாய் உரிமையோடு அந்த வரிகளை எழுதியிருந்தாள் கடிதத்தில்......

பிறரின் கண்களை சாதரணமாக எதிர்கொள்ளும் என்னால் என்னவோ உன் கண்களின் பார்வையை நேரடியாக எதிர்கொள்ளமுடியவில்லைடா

நீ என்னிடம் காதலை பரிமாறிய சமயம் நான் பல குழப்பத்தில் இருந்தேன் அதான் உடனே உனக்கு பதில் சொல்லவில்லை ஆனால் இப்போது சொல்கிறேன் நான் உண்மையிலேயே அளவுக்கதிகமா உன்னைக்காதலிக்குறேன்டா....

உன்னை ஒருநாள் பார்க்கலன்னா உயிரே போயிடும்டா அவ்ளோ உன் மேல் இஷ்டம்டா "ஐ லவ் யூ டா செல்லம்" என்றும் கல்லூரியில் நடந்த
சில நிகழ்வுகளையும் முதல் பக்கத்தில் எழுதியிருந்தாள்..........

இரண்டாவது பக்கத்தில்"உன்னிடம் சொல்லாத மறைத்த சில விஷயங்கள் எழுதியிருக்கிறேன்டா பாரு"என்று எழுதியிருந்தாள்......

"நான் பெரிய பொண்ணான நாளிலிருந்தே தினமும் எனக்கு ஒரு கனவு வரும்டா.....கனவு மாதிரி இல்ல உண்மை நிகழ்வு போல மனதில் தோன்றும் ஒருநாள் இரண்டு நாள் இல்ல பல வருடங்களாகவே எனக்கு அடிக்கடி வரும் கனவு அது.....அதில் நான் தினமும் ஒரு அழகிய குட்டி தீவு போன்ற பகுதிக்கு செல்வேன் நான் செல்லும் அந்தபாதையின் மற்ற இடங்கள் இருளாய் இருந்தாலும் நான் நடக்கும் இடம் வெளிச்சமாய் இருக்கும்.....

அந்த வழியில் இருபுறமும் அழகிய சந்தனமரங்கள் காற்றில் அழகாய் மணம் பரப்பிக்கொண்டிருந்தது.

வானத்திலிருக்கும் எண்ணற்ற நட்சத்திரங்களை போல மின்மினிப்பூச்சிகள் அங்குமிங்கும் உலவிக்கொண்டிருந்தன., தென்றலது தாலாட்டுப்போல இன்னிசைப்பாட அதன் ராகத்திற்கேற்ப தலையாட்டி புன்னகைத்துக்கொண்டிருக்கும் பூக்கள், சிறிது நேரத்தில் அந்த இடம் முழுவதும் வெளிச்சம் பரவும் அப்பொழுதுதான் தெரியும் அது ஒரு அழகிய நந்தவனம்.......!!!

அந்த பாதை முடிவில்லா தொலைவில் நான் பயணித்துக்கொண்டே இருப்பேன்......எங்கோ தொலைவில் சென்ற பிறகு ஒரு நீரோடை பக்கத்தில் பல பறவைகள் அமர்ந்திருக்கும் அவைகள் அதன் பாஷையில் பேசும் ஆனால் அது எனக்கு புரியும்....

"சாமந்தி பூவின் வாசம் வருகிறது.....அதோ ராணி வந்துவிட்டாள் ராஜா எங்கே?" என்று பேசிக்கொள்ளும்.....

ராஜா இருக்கும் இடத்திற்கு அவை பறந்து போகும் நானும் அதன் பின்னாலேயே போவேன் அங்கு ஒருவன் அங்கிருக்கும் மற்ற பறவைகளுடன் உரையாடிக்கொண்டிருப்பான் நானும் அவனைக்காண பக்கத்தில் சென்றதும் கனவும் கலைந்து விடும்.

இப்படியே தொடர்ந்து நடந்துகொண்டிருக்க பார்க்கவே முடியாமல் தவித்துக்கொண்டிருந்தேன்???ஏங்கினேன் ஆனால் முகத்தை மட்டும் பார்க்க முடியவில்லை......ஏக்கத்திலிருந்த எனக்கு அவனிடம் ஒரு அடையாளம் மட்டும் கிடைத்தது அவனது மார்பில் எனது பெயரை பச்சைக்குத்தியிருந்தான்.....அதனால் என் மனதில் அந்த கனவுக்காதலன் முழுவதுமாக நிறைந்திருந்தான்.

இந்த காரணத்துக்காகவே காதல் அப்டீங்குற பேருல யாரு என்கிட்ட பேச வந்தாலும் மறுப்பு சொல்லிட்டிருந்தேன்.

அப்படி இருக்கும் போதுதான் ஒருநாள் நீ என்னிடம் வந்து காதல் சொன்னாய்....நான் பதில் சொல்லாம போயிட்டேன் ஆனால் மனது முழுவதும் உன் நினைவுதான் 99%நீ என் மனதை ஆட்சி செய்து கொண்டிருந்தாய் என் கனவுக்காதலனை தேடி அவனைத்தான் காதலித்து திருமணம் செய்து கொள்ளவேண்டுமென இருந்த என் மனது அன்று இரவு வந்த கனவால் அதற்கு ஒரு முடிவும் கிடைத்தது......!

என் கனவில் காதலனைப்பார்த்தேன் அது வேறு யாருமில்லை நீயேதான் ஆனால் உன் உடம்பில் அந்த மாதிரி என் பெயர் இல்லை என்பது எனக்கு தெரியும்..... இருந்தும் நீதான் என் கனவுக்காதலன் என்பது கனவிலேயே நிரூபணமானது........அதனால் தோழிகளின் உதவியால் அடுத்தநாளே உன்னிடம் வந்து உன் காதலுக்கு சம்மதம் சொன்னேன்.....உன்னை நிஜத்தில் பிடித்திருப்பது பாதி கனவில் வந்ததற்காக பாதி புடிச்சிருந்தது....ஆனால் நீ எனது கனவில் வரவில்லையெனில் நிச்சயம் உன்னை காதலித்திருக்கமாட்டேன் என்னவனை தேடித்தேடியே அலைந்து கொண்டிருப்பேன் எப்படியோ என்னை அலையவைக்காமல் நீயே என் கண்முன் வந்து விட்டாய் அதற்கு நன்றிகள் பல ஆயிரம் முத்தங்கள்டா.........

இந்த சமயம் என் வீட்டிலுள்ளவர்களுக்கு என் கனவு விஷயம் தெரிந்து ஒரு சாமியாரிடம் அழைத்து சென்றனர் அந்த சாமியாரும் என்னிடம் சில விஷயங்களை சொல்லிவிட்டு......உன் கனவைப்பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டார் இதுவரை சொல்லவில்லை ஆனால் உன்னிடம் சொல்லவேண்டுமென துடித்தேன் அதற்கான நாள் வேண்டிக்காத்துக்கொண்டிருந்தேன்.....

அப்பொழுதுதான் நாமெல்லாம் இந்த நீலமலைக்கு வரும் தகவல் கிடைத்தது.நீலமலையில் தான் நீலக்குயில்தேசம் இருக்கிறது என் நம்பிய நான் அங்கு வைத்து கனவில் வரும் அதே சூழலில் உன்னிடம் காதலை சொல்லவேண்டுமென்றும் அந்த சமயம் உனக்கு ஒரு பரிசு தரவேண்டுமென்றும் ஆசைப்பட்டேன் அதற்காகதான் இந்த சர்ப்ரைஸ் என்று எழுதி முடித்திருந்தாள்.........

இன்னொருப்பக்கத்தில்.......ஆனால் கண்டிப்பாக என் கனவில் வந்த காதலனாகிய உன் உடம்பில் என் பெயரோ இல்லை என் பெயர் சார்ந்த ஏதேனும் ஒரு அடையாளம் கண்டிப்பாக இருக்கும் என்று சாமியார் சொல்லியிருக்கிறார் அதனால நிச்சயம் உன் உடம்பில் ஏதேனும் இருக்கும்டா நல்லா தேடிப்பார்த்து எனக்கு பதில் சொல்லு சரியா?என்று எழுதியிருந்தாள்....!

(இந்த கடிதத்தை படித்துக்கொண்டிருப்பவன் அச்சமயம் தன் உடம்பை ஆராய்ந்தான் ஆனால் எதுவும் கண்ணில் படவில்லை)

அடுத்தப்பக்கத்தில் நீலக்குயில் தேசம் என்று எழுதி அதன் கீழே கனவில் வரும் அந்த காட்சிகளை அழகாய் படம் வரைந்து வைத்துவிட்டு அதில் இவர்கள் இருவரும் நின்று பேசிக்கொண்டிருப்பது போன்றும் அழகோவியம் ஒன்றை வரைந்திருந்தாள்......

முடிவில் இப்படிக்கு உன் காதலி என்று எழுதி அவளது கவர்ச்சிகரமான அந்த அழகிய இரு கண்களையும் வரைந்து வைத்திருந்தாள்....!!!!!

(கடிதத்தில் ஒரு இடத்திலும் யாருடைய பெயருமில்லை)

கடிதத்தை படித்து முடித்ததும் அவனால் முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை அடக்கமுடியவில்லை...... நிலைகுலைந்துபோனான்...... திக்கென்றிருந்தது ...... எல்லா விஷயங்களையும் மனதில் ஆழமாய் அசைப்போட்டுக்கொண்டிருந்தான் இப்பொழுது தெள்ளத்தெளிவாய் ஒரு விஷயம் அவனுக்கு புரிந்தது!!!

ஆம்.... ஆக இந்த கடிதத்தை எழுதிய பொண்ணுக்கு அந்த கனவு தேசம்தான் இந்த நீலக்குயில் தேசம் தன் காதலனுக்கு இந்த இடத்தில் வைத்து காதலை காதலனிடம் சொல்லி தன் கனவை நனவாக்க நினைத்திருக்கிறாள்......அச்சமயம் இதே இடத்தில் நம்மை பார்த்து நான் தான் அந்த கனவுக்காதலன் என்ற ஆர்வத்தில் என்னைப்பார்ப்பதற்காக வெளியில் குதித்திருக்கிறாள் என்பதை நன்றாக புரிந்துகொண்டான்......!

இப்பொழுது இதற்கு வழி என்ன? என்ன செய்யலாமென யோசனையில் தன் மார்பை சும்மா தடவியவனின் கைகள் பட்ட இடத்தை கண்கள் ஆச்சர்யத்தில் நோக்கின அவனது மார்பில் அந்த அடர்ந்த கொத்தான ரோமங்களுக்கிடையில் அந்த அழகிய ஒருவிழி இருந்தது அதாவது ஒரு பிறவியில் மச்சம் இருப்பதுபோல் அந்த கண் பொறிக்கப்பட்டிருந்தது???ஆச்சர்யமாகவும் ஆவேசமாகவும் பார்த்துக்கொண்டிருந்தான் இந்த நீலக்குயில் தேசத்தின் நீலவிழி ராஜா??......

________________________________________________________________________________________________________________________________

கயல்விழி மருத்துவமனையில்...........

மெல்ல கண்விழித்து பார்த்தவள் அழுதே விட்டாள் எவ்வளவோ முயற்சித்தும் அவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை....இப்பொழுது ஷீபாவும் பேச ஆரம்பித்தாள் தோளில் சாய்த்து தேற்றினாள் ஆனால் அவளால் முடியவில்லை......

கால் வலிக்குதாம்மா?வேறு எங்காவது வலி இருக்குதா என்று மேடமும் பரிவோடு கேட்டுக்கொண்டிருக்க இன்னொரு மேடம் மருத்துவரை அழைப்பதற்காக சென்றார்.........அங்கு வந்த மருத்துவர் இவளிடம் என்னவென்று விசாரித்தார்.....

ஒண்ணுமில்லை சார் என்று எப்படியோ கஷ்டப்பட்டு அழுகையை நிறுத்தினாள் கயல்.......சரிமா சிறு அடிதான் பயப்படவேணாம் வழியும் காயமும் தீர மருந்துகள் எழுதி கொடுத்திருக்கிறேன் சரியாக சாப்பிட்டால் இரண்டு நாட்களில் எந்த அடையாளமுமின்றி வீட்டிற்கு போய் சேர்ந்திடலாம்...இப்பொழுது கிளம்பலாம் பெரிய அளவில் காயம் இல்லை என்று அன்பாய் அவள் தலையை தடவி தன் சொந்த மகளைப்போல் பேசினார் மருத்துவர்......!

சரி சார் ரொம்ப நன்றி....என்று மருத்துவருக்கு நன்றி சொல்லி விடைபெற்று கிளம்பி வண்டியில் ஏறும் சமயம்.......ஹலோ ஒரு நிமிடம் என்று உள்ளிருந்து ஓடி வந்தார் அந்த மருத்துவர்?????




பயணம் தொடரும்......!

எழுதியவர் : ப்ரியா (31-Mar-15, 1:41 pm)
பார்வை : 336

மேலே