ஜடம்

நான் மிக, மிக சாதாரணமானவன்தான்!
பலர் வெவ்வேறு எழுத்துக்களாக, ஒலிகளாக
இத்தரணியில் வலம் வருகின்றனர்.
சிலர் சொற்களாக, தனித்துவத்தோடு,
தனக்கென்றொரு நியதியோடு, வாழ்கின்றார்கள்;
மிகச்சிலரோ, வாக்கியங்களாக, தலைவர்களாக ,
சொற்களின் கூட்டாக சிறந்து திகழ்கின்றார்கள்!
காந்தி, நேதாஜி, பாரதி போன்றோரோ
கட்டுரை, கவிதை என உருவெடுக்கின்றார்கள்!
உன்னதமானவனாரோ ஆதி சங்கர்ர், புத்தர்,
ஏசு, நபி என்று காவியங்களாகின்றார்கள்.
நான்....நான் அந்த எழுத்துக்களின்,
அந்த சொற்களின் இடையே உள்ள
வெறும் மௌனமாக ,
அந்த வாக்கியங்களின் மத்தியில் உள்ள
வெறும் இடைவெளியாக, எதுவும் இயம்பாமல்,
எந்த அடையாள சங்கேதமும் இல்லாமல்
ஜடமாக ?!
உயிர்த்துக் கொண்டுள்ளேன்!

எழுதியவர் : tssoma எனும் சோமா (31-Mar-15, 8:04 pm)
சேர்த்தது : சோமா
பார்வை : 106

மேலே