பட்டறிவு

பட்டறிவு சொல்லித் தருவது போல்
பகுத்தறிவு சொல்லித் தராது!
பார்வைகள் எல்லாம் வேறுபடும்!
சிந்தனைகள் சேராது போகும்!
உண்மைகள் உடன்படாதொழியும்!
தன்மைகள் தனிநிகராகும்!
வார்த்தைகள் வித்தியாசப்படும்!
அர்த்தங்கள் அநர்த்தங்களாகும்!
மவுனங்கள் மரணித்துப் போகும்!
இத்தனையும்
சரியாக நடக்க
பட்டபிறகாவது திருந்த வேண்டும்!
தவறுக்கு வருந்த வேண்டும்!
பட்டறிவு சொல்வதை கேளாமல்
பாசாங்கு செய்தால்
பிரயோசனம் இல்லை!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (1-Apr-15, 1:44 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 252

மேலே