வி ஐ பி
தங்கையின்
திருமணம்.
மீட்டெடுக்க
நினைக்கின்ற
சொந்த வீடு.
அடைக்கவேண்டிய
வங்கிக்கடன்.
அடகு வைத்த
நகைகள்.
காதலியின்
காத்திருப்பு.
உறவுக்காரா்களின்
சலித்து போன கேள்வி.
இத்தனையையும்
இன்னும் கொஞ்சம்
நீளச் செய்தது
அந்த வாா்த்தை
'செலக்ட் பண்ணா கால் பண்றோம்'..
--கனா காண்வன்