கல்யாணம் செய்து பாா்

..கல்யாணம் செய்து பாா்..

பொன்னியரிசி முதல்
பொட்டுக் கடலை வரை
விலை அத்துப்படியாகும்.

பவுன் விலை ஏறினால்
பதட்டபடும் முதல் நூறு பேரில்
நீயும் இருப்பாய்.

மாமனாருக்கும் மச்சானுக்கும்
டிக்கெட் புக் செய்வதிலேயே
பாதி இன்டொ்நெட் பேலனஸ்
தீர்ப்பாய்.

திருமணம் செய்துபார்...

உனக்கும்
சமைக்க வரும்.

குறைந்நபட்சம்
உப்பு காரமாவது
சரியான விகிதத்தில்
சோ்ப்பாய்.

அதிகாரியாய்
அலுவலகத்தில்
அதட்டுவாய்-ஆனால்
வெண்டைக்காய்
வாங்க மறந்ததற்கு
வீட்டில் வசவு வாங்குவாய்.

கல்யாணம் செய்து
குழந்தை பெற்று பாா்...
உனக்குள்
தாய்மை குடியேரும்.

தினம் இரண்டு முறை
பள்ளிக்குச் செல்வாய்.

ஒரு கையில் மடிக்கணிணியும்
ஒரு மடியில் குழந்தையையும்
சமாளிக்க கற்றுக்கொள்வாய்..

வீட்டை விட்டு
வெளியேறிய உடன்
வீட்டு ஞாபகம்
வந்துவிடும் உனக்கு..

முதல் முறை பேசும்போது
ஏற்பட்ட பூரிப்பு கடைசி வரை
உன் மனைவியிடம் கிடைத்தால்
நீ உலகமகா அதிா்ஷ்டசாலி தான்.

கல்யாணம் செய்து பாா்..

புடவைகளின் ரகங்கள்
உனக்கு மனப்பாடமாகும்.

நண்பர்களுக்கு கடைசியாக
ட்ரீட் கொடுத்தது எப்போது?
மறந்திருப்பாய்..

குட்டி தொப்பை
குழந்தையின்
மைதானமாகும்.

ஒருமுறையாவது
சரக்கடிக்கவேண்டும் என்று
வெறும் நினைப்பிலேயே
ஓரிரு வருடங்கள் கழிந்திருக்கும்..

இந்த கவிதையை வாசித்து
இவன் சொன்னது வெறும்
இரண்டு சதவீதமே என்று
புலம்ப ஆரம்பித்துவிடுவீர்.
....கல்யாணம் செய்து பாா்...

--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (1-Apr-15, 2:37 pm)
பார்வை : 8524
மேலே