அன்பின் அர்த்தங்கள்
ஏதேதோ பிரச்சனை
எவன்மீதுள்ள கோபமோ
அவள்மீது பாய்ந்தது
ஈட்டியாய் வீட்டினில் ...
அவளின்
ஒருசொட்டு விழிநீர்
நெஞ்சை உலுக்க
மெளனமானேன்...
இரவினில்
இட்லி சுடச்சுட அவித்து
சட்னி சாம்பாருடன்
எள்ளுப்பொடி
எண்ணையுமாய்
அவள் பரிமாறிய போது
தேனாய்த்தான் இனித்தது
திட்டிய அதே வாய்க்கு...
----------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்