இலட்சியம்
இலட்சியம்
இலட்சியங்கள் ஒன்றும்
இலட்சங்கள் அல்ல
இலட்சியங்கள் ஒன்றும்
இன்முகம் காட்டா
இலட்சியங்கள் ஒன்றும்
இன்றே நிறைவேறா
இலட்சியங்கள் ஒன்றும் -உன்னை
மலர் பாதையில் இட்டு செல்லா
இலட்சியங்கள் ஒன்றும்
மானுட தர்மத்திற்கு கட்டு படா
இலட்சியங்கள் ஒன்றும்
நான்கு சுவர்களுக்குள்
கட்டி முடிக்க படா
இலட்சியங்கள் ஒன்றும்
கனவில் கை கூடா
இலட்சியங்கள் ஒன்றும்
ஒரே திசையில் பயணம் செய்யா
இலட்சியங்கள் எல்லாம் -உன்
கடும் தவத்தால் -உன்
காலடியில் ....
சிவ.ஜெயஸ்ரீ