பிரிவு
வட்ட நிலா வடிவழகி
வந்த தடம் தெரியவில்ல ஆனா
நிஜமில்லா நிழல் ஒன்னு
என் நெஞ்ச விட்டு மறையவில்ல
மனம் என்ன உன்வீட்டு மந்தார பூவா
அந்தியிலே மலர்ந்து அதிகாலை உதிர
ஒருநேரம் பூத்து விட்டு
மறுநேரம் மொட்டு கட்டும் பூவ போல
இல்ல இந்த மனசு
வட்ட கெணத்துல விட்ட கல்ல போல
அடியில கெடந்து படுத்துதே
ஆயிரம் நெனப்பு உள்ள
ஊருக்குள்ள உள்ள பேரு வேற
என் உசுருகுள்ள உன்ன வச்ச உறவு வேற
உன்ன உண்மை அன்புன்னு
ஏதோ தப்பா தான் நெனச்சிட்டேன் போல
கடிகாரம் கதை சொல்லும்
பிரிந்திருந்த காலம் போய்
நாட்காட்டி கணக்கா
நம்ம பிரிவு தொடருதே
ஆயிரம் உறவிருக்கு உனக்குன்னு சொல்லிக்க
விட்டு போனாலும் என்னைக்கும்
செத்து போகாத என் ஒரே உறவு நீ தானே
நான் உன்ட கொஞ்ச நாள் பேசாத போது
எத்தனையோ முறை நீ கேட்டிருக்க நான் செத்துபோனாலும் உனக்கு கவலை இல்லையான்னு
நான் இப்போ செத்து போக தான் என்ன விட்டு போனாயோ ................
உன் இரவு விடியும் வரை நான் காத்திருக்கிறேன்
உன் விடியும் வெளிச்சத்தில் நான் தெரியாமல் போய்விடுவேனோ எனும் அச்சத்துடன் .............................