கனவிலும் மணக்கும் காதலி
சந்தனம் மணக்க திரும்பினேன்
நடந்து சென்றவள் என்னவள்
கண் பார்வையிலே என்னை
விழுங்கிடுவாளோ என்ன, அவள்...
உதடுகள் பேசி பேசி கலைத்து போகவில்லை
காற்று சுமந்து சுமந்து அலுத்துப் போகவில்லை
நாவும் சுழன்று சுழன்று நின்று போகவில்லை
வார்த்தைகள் கொட்டக் கொட்ட தீர்ந்துப் போகவில்லை
பேசிக்கொண்டே வானத்தை கடந்து
சிறம் நிலவைத்தொட, கரம்
மெல்லிய கரத்தைத்தொட மனதோடு
மிதந்தது இருவுடல்கள் ஒன்றாய்...
கடல்போல் மனம் ஆட
மூங்கிலும் கவி பாட
முனகல் ஸ்ருதி கூட
விழித்தேன் வழி தேடி...
இரா நவீன் குமார்