நீயா நானா

எறும்பும் யானையும் இணையாக
ஒரே இலக்கு நோக்கி பயணிக்கின்றன
இருவருக்கும் இடையே
நீயா நானா போட்டி நடக்கிறது

உன்னால் என்னை பார்க்க முடியாதே
என்கிறது எறும்பு
நீ மட்டும் என்னை பார்த்து விடுவாயா
என்கிறது யானை
ஆமாம் என்னால் பார்க்கமுடியாது
ஏன்னா எனக்கு கண்கள் கிடையாது
என்கிறது எறும்பு

அதற்குள்
பறந்து வந்த ஈசல் எறும்புக் கும்பல்கள்
யானைக் காதுகளின் புழைகளுக்குள் புதைகின்றன
உடனே
ஆதிமூலமே ஆதிமூலமே என்று உளறுவதை மறந்து
நான் அம்பேல் நான் அம்பேல் என்று
பிளிறு பாஷையில் அலறியது யானை

அலட்டிக்காத எறும்பின் பயணம் தொடர்கிறது

எழுதியவர் : (4-Apr-15, 7:43 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 270

மேலே