பூந்தளிருக்கோர் தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ என் அன்னக்கொடி ஆராரோ
ஆராரோ ஆரிரரோ என் அல்லித்தண்டே ஆராரோ

சந்திரனே ஆராரோ என் சரித்திரமே ஆரிரரோ
சூரியனே ஆராரோ என் சுடர் விளக்கே ஆரிரரோ

பௌர்ணமியே ஆராரோ என் பொன்னொளியே ஆரிரரோ
தாமரையே ஆராரோ என் தாரகையே ஆரிரரோ

பூமலரே ஆராரோ என் புன்னகையே ஆரிரரோ
செந்தழிலே ஆராரோ என் சிந்தனையே ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ என் அன்னக்கொடி ஆராரோ
ஆராரோ ஆரிரரோ என் அல்லித்தண்டே ஆராரோ

எழுதியவர் : சங்கரநாராயணன் (8-Apr-15, 1:38 pm)
பார்வை : 153

மேலே