ஒரு முத்தம் வரம்
விழித்த உடன் காணாது உன்னை
விந்தையான வாழ்க்கையிலே
காணாமல் போனனே
தொலைநோக்கு வேட்கையிலே
நெளியும் கானல் நிம்மதி
என் இன்பம் நீயென
மறந்து போன என் மதி
பணத்தின் தேடல்
அலுவலக ஓடல்
நண்பனின் நாடல்
கவலையின் சாடல்
சோர்வின் தீண்டலும்
சொர்க்கத்தின் வாசலும்
இன்னும் ஆயிரமும் தொலைந்து
போனது,
அப்பா என்று தலைபடித்து
நீ தருமொரு முத்தத்தில்...